Saturday, July 18, 2009

நக்கீரன் கட்டுரை: அப்துல்கலாமுக்கு பகிரங்க கண்டனம்

அறிவகம் கட்டுரை திடீர் என நின்றதற்கு பல காரணங்கள். எல்லாம் தெரிந்துவிட்ட ஞானியாக என்னை நானே நம்பிக்கைப்படுத்திக்கொண்டு எழுதத்துவங்கிய புத்தகம் தான் அறிவகம் கட்டுரை தொடர். உண்மையில் கடைசி பதிவு வரை அந்த நம்பிக்கை துளியும் குறையவில்லை.

ஆனால் எனக்குள் மீண்டும் எழுந்த ஒரு வினாவுக்கு இன்னும் விடை கிடைக்கவில்லை. விடை கிடைத்ததும் நிச்சயமாக அறிவகத்தில் மீண்டும் எழுதத்துவங்குவேன்.

சரி விடயத்துக்கு வருகிறேன். எனக்குள்ளேயே அழுது புலம்பிய புலம்பலை மிகுந்த மன இறுக்கத்துடன் இங்கு எழுதுகிறேன். திரு. அப்துல்கலாமை புண்படுத்த எழுதப்படும் கடிதம் அல்ல இது. ஒரு வேளை என் தவறான புரிதல் கூட காரணமாக இருக்கலாம்.

அறிவகம் கட்டுரை தொடரை முழுமையாக படித்த அன்பர்களுக்கு அறிவத்தின் நோக்கம் நன்கு தெரிந்திருக்கும். உலகில் அணு ஆயுதங்களை ஒழித்து, யுத்தம் இல்லாத அமைதியான புதிய யுகம் படைக்கவேண்டும் என்ற இலக்கை நோக்கி பயணித்த கட்டுரை தான் அது. ஆனால் அது அடையமுடியாத மிகப்பெரிய இலக்கு என்பதை புரிந்ததுகொண்டேன்.

ஈழத்தில் போர் உச்சம். பசியால் பட்டினியில் குழந்தைகளும் பெண்களும் அப்பாவிகளும் சாகும் கொடூரம். ஒரு சின்ன குக்கர் விசில் சத்தத்தை கேட்டாலே அதிர்ச்சியில் அழும் என் குழந்தை. ஆனால் ஈழத்தில் ? சீரனிக்க முடியவில்லை. என்ன செய்வது? ஒரு குட்டி தீவீல் அமைதியை ஏற்படுத்த முடியாத நம்மாலா உலகையே அமைதிப்படுத்த முடியும்?

பலவழிகளில் யோசித்தேன்.

நல்லவர்கள் இணைந்தால் இந்த உலகை மாற்றிக்காட்ட முடியும் என்ற அசைக்கமுடியாத நம்பிக்கையில்

ஒரு நல்ல தலைமையை தேடினேன்.

நான் தெரிந்தெடுத்த அந்த தலைமைக்கு 3 மாதங்களுககு முன் எழுதி கடிதம், மின்அஞ்சல்

அன்பார்ந்த திரு. அப்துல்கலாம் அவர்களுக்கு...

இலங்கை தமிழர்கள் படும் இன்னல்கள் பற்றியும், தற்போது இலங்கையில் நடந்துகொண்டிருக்கும் போர்பற்றியும் நான் சொல்லி தங்களுக்கு தெரியவேண்டியதில்லை.

இந்திய, இலங்கை அரசுகளின் மனசாட்சியை தட்டிக்கேட்க வேறு வழி தெரியாமல் 8 இளைஞர்கள் இதுவரை தீக்குளித்து இறந்திருக்கிறார்கள். நானும் அந்த முடிவை எடுக்க விரும்பவில்லை. ஏனென்றால் மனித உயிருக்கு மதிப்பளிக்காத மனசாட்சியற்ற அரசுகளிடம் எத்தனை பேர் உயிரை மாய்த்தால் தான் என்ன பயன்? ஆனாலும் உள்ளம் கொதிக்கிறது. இந்தியா உட்பட உலக நாடுகளின் இந்த பாராமுக போக்கை எப்படி தட்டிக்கேட்பது?


எனக்கு தெரிந்த ஒரே வழி அப்துல்கலாம். ஒரு தமிழனாக அல்ல மனிதாபிமானம் உள்ள முன்னாள் குடியரசு தலைவராக உங்களிடம் ஓரு கோரிக்கை:


தயவு செய்து குரல் கொடுங்கள். உங்கள் குரலுக்கு விலையிருக்கிறது. அரசியல் வாதிகளை நம்பி பலனில்லை. அதனால் தான் உங்களிடம் கேட்கிறேன். தமிழன் என்ற முறையில் குரல் கொடுக்க வேண்டாம். மனித நேயமுள்ள ஒரு மனிதன் என்ற முறையிலாவது தயவு செய்து குரல் கொடுங்கள்.


5 ஆண்டு காலம் இந்திய ஜனாதிபதியாக இருந்துள்ளீர்கள். பல நாட்டு தலைவர்களை தெரியும். பல நாட்டு நல்லெண்ணவாதிகளை தெரியும். இந்தியா முழுவதும் உள்ள எம்.பி., க்களை தெரியும். மக்களை தெரியும், மாணவர்களை தெரியும். அவர்களிடம் ஈழத்தமிழனின் நிலையை புரியவையுங்கள். தயவு செய்து குரல்கொடுங்கள்.

எந்த காரணம் கிடைத்தாலும் அரசியலாக்கி அரசியல் சூழ்ச்சிகளை சாதித்துக்கொள்ளும் அரசியல்வாதிகளின் விமர்சனங்களுக்கு அஞ்சி நல்லவர்கள் ஒதுங்கிக்கொண்டே போனால் மக்களுக்கு புலம்புவதையும், தீக்குளித்து உயிரை மாய்த்துக்கொள்ளுவதையும் தவிர வேறு வழியில்லை.

இதுவரை ஈழத்தில் ஒரு லட்சம் தமிழர்கள் மன்னிக்கவும் மனிதர்கள் இறந்திருக்கிறார்கள். இன்று 2 லட்சம் மனிதர்கள் மரணப்பிடியில் சிக்கியிருக்கிறார்கள். இவர்கள் குண்டடிபட்டு சாவது ஒரு புறம். தற்போது சோற்றுக்கு வழியில்லாமல், மருத்துவ உதவி கிடைக்காமல் குழந்தைகள் பெண்கள், பெரியவர்கள் என அத்துனைபேரும் பட்டினியில் செத்துக்கொண்டிருக்கிறார்கள். கடந்த 5 நாட்களாக ஒருவேளை சோறு கூட கிடைக்காமல் செத்துகொண்டிருக்கும் குழந்தைகளை மறந்துவிட்டு, மூன்று வேளைக்கும் சோறு உண்டு வேலைசெய்தோமா, பாதுகாப்பாக இருக்கிறோமா என படுத்து உறங்க எனக்கு மனமில்லை.

நாடு வல்லரசாக வேண்டும் என்பது நமது கனவுதான். அதற்காக மனிதாபிமானத்தை குழிதோண்டி புதைக்க எப்படி மனம் வருகிறது?

இந்த கொடுமையை எதிர்த்து அங்கொன்றும் இங்கொன்றுமாக கிளம்பும் குரல்கள் அங்கங்கேயே ஒடுக்கப்படுகின்றன. அரசியல்வாதிகள் கொடுக்கும் எந்த குரலும் நம்பத்தகுந்ததாக இல்லை. ஒட்டுமொத்த தமிழர்களின், மனிதாபிமானம் உள்ள மக்களின் உணர்வுகளை உங்கள் குரல்மூலம் உலகுக்கு சொல்லுங்கள்.

உடனடி தேவை இலங்கையில் போர்நிறுத்தம். போர்முனையில் பலநாட்கள் பட்டினி கிடக்கும் மக்களுக்கு உணவு மருத்துவ உதவிகள்.

அதற்கு பின் நிரந்தர அரசியல் தீர்வு.

இதை ஏற்படுத்த ஏன் சர்வதேச நல்லெண்ணவாதிகளால் முடியாது?

குரல் கொடுங்கள். உங்கள் பின் அணிதிரள என்னை போன்ற லட்சோப லட்சம் இளைஞர்கள் தயாராக இருக்கிறோம்.

அரசியல் விமர்சனங்களுக்கும் அச்சுறுத்தலுக்கும் அஞ்சி நல்லெண்ணவாதிகள் ஒதுங்கிக்கொள்வது இந்த நாட்டுக்கே கிடைத்த சாபக்கேடு. தயவு செய்து, தயவு செய்து நீங்களும் ஒதுங்கியே இருக்காதீர்கள்...

நம்பிக்கையுடன்...

அறிவகம் கட்டுரை தொடரில் அணு ஆயுதம் பற்றி அப்துல்கலாமுக்கு எழுதிய கடிதத்திற்கு 2 நாட்களில் பதில் வந்தது. மகிழ்ந்தேன். ஆனால் ஈழக்குமுரலுக்கு 3 மாதங்களுககு இதுவரையும் பதில் இல்லை.

எனது மின்னஞ்சல், கடிதம் அவரை சென்றடையவில்லையா என்பது எனக்கு தெரியாது? ஆனால் 5 முறை அனுப்பி விட்டேன். இது வரை பதில் இல்லை. எனக்கு பதில் ஒரு புறம் இருக்கட்டும். எனது கடிதம் சேரந்ததா சேரவில்லையா என்பது இரண்டாம் பட்சம். ஏன் ராமேசுவரத்தில் பிறந்து வளர்ந்த அப்துல்கலாமுக்கு தெரியாதா இலங்கை நிலவரம்?

அணு ஆயுதம் தயாரித்ததை விட ஊனமுற்ற குழந்தைகளுக்கு எடை குறைவான உலோக கால் கண்டுபிடித்தது தான் மிகுந்த மனநிறைவை தந்தது என்று நிருபர்களிடம் பெருமையாக சொன்ன அப்துல்கலாமுக்கு, அதே ஆயுதங்களால் லட்சக்கணக்கான குழந்தைகள் ஊனமுற்றவர்களாக மாறும் கொடுமை மட்டும் தெரியாதா?

உண்மையில் அப்துல்கலாம் மீது மரியாதை வைத்து அவரை முன்உதாரணமாக கொண்டு இலட்சியம் கொண்ட இளைஞர்களின் நானும் ஒருவள்.

இப்போதும் நான் அவரை குறைகூறவில்லை. இன்னும் இருக்கிறது ஈழத்தில் உயிர். குற்றுயிராய் குலையுயிராய் 2 லட்சம் தமிழ்ரகள் தினம் தினம் செத்துக்கொண்டிருக்கிறார்கள். அப்துல்கலாமுக்கு தெரியாதது இல்லை. உரக்க குரல் கொடுங்கள். உங்கள் பின் அணி திரள நீங்கள் எதிர்பார்க்கும் சக்திவாய்ந்த இளையசமுதாயம் துடித்துக்கொண்டிருக்கிறது. தயவு செய்து மீட்டெடுக்க குரல் கொடுங்கள்.

இதை ஏன் உங்களிடம் கேட்கிறோம்?

நீங்கள் இந்த வாரம் நக்கீரன் கட்டுரையில் எழுதியுள்ள அதே தலைமை பண்புக்காக தான்.

இன்றைய நேற்றைய முதலமைச்சர்கள், அரசியல் தலைவர்கள், பிரதமர்கள், குடியரசு தலைவர்கள் முதற்கொண்டு எல்லா தலைவர்களுக்குமே காப்பாற்றுங்கள் என ஈழத்தமிழர்கள், இந்திய தமிழர்கள் லட்சக்கணக்கான கடிதங்கள் எழுதியாயிற்று. ஒரு உயரை கூட காப்பாற்ற யாரும் முன்வரவில்லை.

இனியுமா தலைவர்களை நம்புவது?

இல்லை யாரை நம்புவது?

உங்கள் வெத்துப்புகழை பரப்புவதற்க எழுத்தை பயன்படுத்தாதீர்கள்.

ஈழத்து உயிர்களை மீட்டெடுக்க குரல்கொடுங்கள், இல்லாவிட்டால் தயவு செய்து இந்தனை நாள் ஒதுங்கியிருந்தது போலவே ஒரு மூலையில் ஒதுங்கிக்கொள்ளுங்கள்.

குழந்தைகளிடம் ஆணுஆயுத கலாச்சாராத்தையம், வல்லரசு கனவையும் திணிக்காதீர்கள். அந்த குழந்தைகள் நிம்மதியாக வாழ அன்பையும், அமைதியையும், நல்லரசு கனவையும் போதிக்க முடிந்தால் போதியுங்கள். இனிவரும் உலகுக்கு அது தான் தேவை.

உங்கள் பிரபலத்துக்காக குழந்தைகளை தவறாக வழிநடத்தாதீர்கள்.

இந்த நாடும், நாட்டு மக்களும் நாசமாக போகட்டும் என்று நீஙகள் நினைத்தால் தொடருங்கள் உங்கள் சேவையை. உண்மை என்றாவது ஒரு நாள் உயிர்தெழும்.

ஈழத்து குழந்தைகளுக்காக குரல்கொடுக்காத நீங்கள் இந்திய குழந்தைகளிடம் மட்டும் அன்பை பொழிவதுபோல நடந்துகொள்வது வியப்பாக இருக்கிறது.

மீண்டும் ஒரு சிறு நம்பிக்கையில்

தயவு செய்து ஈழத்துக்குழந்தைகளுக்காக குரல்கொடுங்கள்...

11 comments:

 1. உங்கள் கடிதம் கண்டிப்பாக அவரைச் சென்றடையும்.

  ReplyDelete
 2. /ஆனால் அது அடையமுடியாத மிகப்பெரிய இலக்கு என்பதை புரிந்ததுகொண்டேன்./

  இந்த உண்மையைப் புரிந்து கொண்ட உங்களுக்கு, தலைமைப் பண்பு என்பது 'நேயர் விருப்பம்' அல்ல. ஒரு முன்னாள் ஜனாதிபதி, தன்னுடைய கடமைகளையும், பொறுப்பையும் நன்கு உணர்ந்த ஒருவரை ஆதரவளித்தே ஆக வேண்டும் என்கிற மாதிரி எழுதுவதும்,
  /இது. ஒரு வேளை என் தவறான புரிதல் கூட காரணமாக இருக்கலாம்./
  நிச்சயமாக, தவறான புரிதல் தான் என்பது உங்களுக்கே தெரிந்திருக்கிறதே!

  ReplyDelete
 3. very good blog and very good letter to Abdul kalam.

  -Tholar
  www.mdmkonline.com

  ReplyDelete
 4. பதவி சுகத்துக்கு குலாம் அப்துல் கலாம்நான் கலாமை விமர்சிப்பவன் என்று பாலகுமாரனின் அபிமானிகள் என் மீது குற்றம் சாட்டியுள்ளனர். நான் மற்றெந்த அரசியல்வாதியையும்(இந்தியாவின் எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வாக நான் தீட்டிய திட்டத்தை கண்டு கொள்ளாதவர்களை தவிர) விமர்சித்ததில்லை. காரணம் அவர்கள் புலிகள்.(தமிழ் புலிகள் அல்ல) . நான் கவலைப்படுவது பசுத்தோல் போர்த்த புலிகளைப் பற்றித்தான்.பதவி சுகத்துக்கு குலாம் அப்துல் கலாம் என்பதை நான் என்றோ அறிவேன். ஆனால் உலகம் அவரை ஆதர்ச புருஷராக கொண்டாடியது. இதற்கு பார்ப்பன ஆதிக்கம் மிக்க மீடியாவும் ஒரு காரணம். மைனாரிடி வர்கத்தை சேர்ந்த கலாமுக்கு உரிய முக்கியத்துவம் தராவிட்டால் தம் சுயமுகம் வெளிப்பட்டு விடுமோ என்ற அச்சத்திலும்,குற்ற மனப்பான்மையிலும் சற்று அதிகமாகவே முக்கியத்துவம் தரப்பட்டு விட்டது. என்னதான் நாடு முன்னேறினாலும் அச்சில் வந்ததெல்லம் உண்மை என்று நம்பும் மக்கள் இன்னும் இருக்கிறார்கள். (ஆந்திர ஐ கோர்ட்டு நீதிபதி முன்பு பத்திரிக்கை கட்டிங்குகளை ஆதாரமாக சம்ர்ப்பித்தபோது அவர் ரூபாய் செலவழித்தால் எந்த செய்தி வேண்டுமானாலும் பத்திரிக்கையில் வெளிவரும் என்பது எங்களுக்கு தெரியும் என்று சொன்னாராம்.)
  நிற்க..கலாம் கதைக்கு வருவோம். அரசுத்துறை நிறுவனங்கள்,அவற்றில் நிலவும் சிகப்பு நாடாத்தனம்.ஊழல் குறித்து அறியாதவர்கள் இல்லை. ஒரு அரசுத்துறை நிறுவனத்தில் யாதொரு முரண்பாடும் இல்லாது நீண்ட காலம் பணியாற்றியதை கொண்டே கலாமின் ஜாதகத்தை கணித்துவிடலாம்.
  சரி ஒழியட்டும் இவர் உந்துதலில் அரசு செய்த அணுகுண்டு வெடிப்பினால் ஏற்பட்ட பாதிப்புகளை அனுபவித்தவர்கள் மறக்க முடியுமா? இதையும் மேரா பாரத் மகான் கோஷங்கள் மழுப்பிவிட்டன. இதுகூட போகட்டும்..நான் எளிமையானவன்,அறிவுஜீவி என்று சொல்லிக்கொள்ளும் கலாம் ஜனாதிபதி மாளிகையின் பிரம்மாண்டத்தை நேரில் பார்த்ததுமே என்ன செய்திருக்க வேண்டும்? இதெல்லாம் சரிப்பட்டு வராது ..எனக்கு ஏதாவது அரசு வீட்டை ஒதுக்கி கொடுங்கள் என்று கேட்டிருக்கவேன்டும். செய்தாரா இல்லை.
  அதுவும் ஒழியட்டும் அந்த மாளிகையின் வியர்த்த செலவுகளையாவது பாதிக்கு குறைத்திருக்க வேண்டாமா? கு.ப. அதை மாறுபட்ட,ஆக்கப்பூர்வமான வழிகளில் உபயோகித்திருக்கலாமே. இன்று கணக்கெடுக்க சொல்லுங்கள் ஜ.மாளிகையில் கலாமை சந்தித்த பிருமுகர்களை..இதில் வயிறு நிறைந்தவர்கள் எத்தனை பேர்? பார்ப்பன அ.ஜீவிகள் எத்தனை பேர்,ஆளும்,அதிகார வர்க முதலைகள் எத்தனை பேர்? பீகார் சட்டமன்ற கலைப்பு விவகாரம் ஒன்று போதுமே கலாம் பதவி சுகத்துக்கு குலாம் என்பதை நிரூபிக்க.
  எம்.பி.க்கள் கேள்வி கேட்க லஞ்சம் வாங்கினார்கள்..தொகுதி நிதியில் விளையாடினார்கள் .கலாம் கழட்டியது என்ன? குற்றச்சாட்டுகளுக்கு ஆளான எம்.பி.க்கள் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையுடன் கு.ப.உண்ணாவிரதம் இருப்பேன் என்று மிரட்டவாவது செய்தாரா? இல்லை.
  சரி ஒழியட்டும் வந்த மாதிரியே போயிருந்தாலும் மன்னித்திருக்கலாம். போகும்போது ஆந்திரத்து தந்திர பாபு(அச்சுப்பிழையல்ல) மீண்டும் போட்டியிட கோரியபொது வெற்றி நிச்சயம் என்றால் ஓ.கே என்று வாயை விட்டார்..பின் ஜ.மாளிகை தரப்பில் அறிக்கை வெளியிட்டு மேலுதட்டில் பட்ட மண்ணை துடைத்துக் கொள்ள வேண்டி வந்தது.

  ReplyDelete
 5. உங்களுக்கு கை கொடுக்க நானும் இருக்கிறேன் தோழா....மனித நேயம் அழிந்து பல வருடங்கள் ஆகிறது இனி அதை நாம் எதிர்பார்க்க முடியாது... அரசியல் வாதிகள் நினைத்தால் முடியாதது ஒன்றும் இல்லை ஆனால் அவர்கள் நினைக்க மாட்டர்கள்..கூடிய சீக்கிரம் மறு தேர்தல் வர வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன் ஏனென்றால் அப்பொழுதான் திரும்பவும் இலங்கை பிரச்சனையை அரசியல் வாதிகள் கையில் எடுப்பார்கள்.... மனித மனங்கள் குப்பைத்தொட்டிகளாக இருக்கும் வரை எந்த ஒரு பிரச்சனைக்கும் தீர்வு கிடைக்காது..... மனித மனங்கள் பூக்குவியல்களாக மாற வேண்டும் அப்பொழுதான் நம் எண்ணத்திலும் மனம் வீசும்.......

  ReplyDelete
 6. சிறந்த பதிவு! பாராட்டத்தக்க நடவடிக்கை!

  தமிழன் அக்னி செய்வான்!... ப்ரம்மோசு செய்வான்!

  அவன் ஊரானைக்காக்க (மீனவர்) ஆளில்லை!

  அண்ணாதுரை செயகோள் செய்வார்! அதை வைத்து ஈழத்தமிழனைக்கொள்ள தகவல் வழங்கும் இந்திய அரசு ராஜபக்சேவுக்கு.....

  இதைகாலமெல்லாம் பொறுக்க முடியாது...

  நான்கூட கலாம் அவர்களுக்கு நமது மீனவர் இடர் பற்றி மின்னஞ்சல் அனுப்பினேன் பதில் இல்லை..


  இப்படிக்கு
  ஒரு இளம் அறிவியலாளன்

  ReplyDelete
 7. என்னுடைய மின்னஞ்சலின் நகல்

  Dear Sir. Good Morning! I am Dr...., a growing young scientist from middle class agricultural family, living in ......... Currently I am doing my postdoctoral research .......in the field of Organic Electronics. I am one among many students who have been inspired by your research and words.
  I am writing this mail to you express my long-standing thrust of “requesting you to give a voice for solving the issues of our fishermen belong to Tamilnadu state, who are often attacked by Armed Forces of Sri Lanka. Always I am getting disturbed by this issue. Since you are belonging to the island town “Rameshwaram” you have more responsibility to work for solving this issue than any other National Leader, including politicians, I strongly believe.

  The following factors are often cited as reasons for the killing of our fishermen by Sri Lankan Army.

  1. The fishermen are crossing the sea due to the lake of fish wealth within the sea limit of our nation, where we are sharing border with Sri Lanka.

  2. Conventionally fishermen feel they do not have the limit in the sea nearer to their home town, hence knowingly they are entering into other’s sea limit or unknowingly heading into other’s border due to unavailability of instruments, which can indicate the borders in sea.


  3. The default minimization of fishing area due to the handover of our Island Katchatheevu to Sri Lanka in 1974, is directing our fishermen to enter others sea limit.

  4. The long lasting enmity between Singhalese Majority and Minority Tamils in Sri Lanka. The current state of the issue and the behaviour of armed forces belong to us and other neighbor-Pakistan in terms of legal enforcement (both are not beating or killing the fisherman from any other neighbor, including from Sri Lanka, for entering into their sea limit) may indicate that last one as main reason for the issue.

  As learnt from the news, which are citing the affected fishermen as a source, it seems Sri Lankan armed forces even are attacking them when they are fishing inside our sea limit or the international limit common to both nations (India and Sri Lanka).

  Currently we are growing as global power in economy and influencing many global issues, hence I feel these killings as inappropriate happenings and very sad incidents. I strongly believe that by taking appropriate measures to increase the fish wealth in our sea limit or by creating alternative sources for income to our fishermen we can solve this issue. Also I do not want to stay as a hesitant to support for long standing demand of retaking Katchateevu Island from the hands of Sri Lanka. Here I politely request you to openly give the voice for solving this issue. Please use your power or popularity. As a researcher we (many of them like me) are ready to work with you for solving this issue. I believe every Indian who is educated by the tax money of common man should raise the voice for solving the issues of these kinds. I do not think the scientists work is ending within the laboratory or university premises. I am waiting to see and support your efforts regarding this issue. Thanking you in advance with kind regards,

  Yours Sincerely Dr.....


  இப்படிக்கு
  ஒரு இளம் அறிவியலாளன்

  ReplyDelete
 8. my mail sent to

  To :apj@abdulkalam.com

  Date :16-Jul-2010

  இப்படிக்கு
  ஒரு இளம் அறிவியலாளன்

  ReplyDelete
 9. ந்த குழந்தைகள் நிம்மதியாக வாழ அன்பையும், அமைதியையும், நல்லரசு கனவையும் போதிக்க முடிந்தால் போதியுங்கள். இனிவரும் உலகுக்கு அது தான் தேவை.

  உங்கள் பிரபலத்துக்காக குழந்தைகளை தவறாக வழிநடத்தாதீர்கள்.

  இந்த நாடும், நாட்டு மக்களும் நாசமாக போகட்டும் என்று நீஙகள் நினைத்தால் தொடருங்கள் உங்கள் சேவையை. உண்மை என்றாவது ஒரு நாள் உயிர்தெழும்.
  by
  Mani

  ReplyDelete