Friday, August 8, 2008

நபிகளும் இயேசுவும் ராமரும் செய்த தவறு என்ன? (உலகின் அவசரத்தேவை-8)

இன்று உலகெங்கும் சுதந்திரமான மக்களாட்சி இருந்தும் ஏன் மக்கள் மத்தியில் விழிப்புணர்ச்சி வருவதில்லை. ஏன் அரசியலை கண்காணிக்கும் பொறுப்புணர்ச்சி இருப்பதில்லை. ஏன் பேரழிவுக்கு எதிராக மக்கள் ஒன்று திரண்டு போராடத் துணிவதில்லை? ஏன் இந்த அலட்சியப்போக்கு, எதனால் இப்படி ஒதுங்கிக்கொள்ளும் மனப்பாண்மை?

எல்லாவற்றிற்கும் மூலகாரணம் அறியாமை!

தனி ஒரு மனிதனின் சுய பிரட்சனைகள் முதற்கொண்டு, சர்வதேச பிரட்சனைகள் வரை எல்லாவற்றிற்கும் அறியாமைகள் தான் மூல காரணங்களாக உள்ளன. அறியாமையால் தான் சமாதானத்தை விரும்பும் உலகின் பெரும்பான்மை மக்கள் அழிவுக்கு எதிரக ஒன்று திரள மறுக்கிறார்கள். அறியாமையால் தான் வாழ்நாள் முழுவதும் காட்டிலும் பாலைவனத்திலும் அலைந்து திரிந்து, சாகும்போது கூட சபிக்கப்பட்டவர்களாய் சாகிறார்கள் தீவிரவாதிகள்.

அறியாமை இது தான் இநத கலியுகத்தின் மிகப்பெறிய அவலம்.

எது சரி? எது தவறு? எனக்கு சரி என படுவது மற்றவனுக்கு தவறாக படுகிறது. மற்றவனுக்கு சரியாகப்படுவது எனக்கு தவறாகபடுகிறது. இப்படியிருக்கும் இந்த யுகத்தில் எப்படி பிரட்சனைகளை சரி, தவறு என தீர்மானிப்பது. அழிவை விரும்பாத ஒவ்வொரு மனங்களும் கேட்கும் கேள்விகள் இவை.

தர்மத்தின் வாழ்வுதனை ஏன் சூது கவ்வ வேண்டும்? - இது ஒவ்வொரு எதார்த்த மனங்களிலும் இருக்கும் உச்ச

கேள்வி.

முற்பிறவி, இப்பிறவி, மறுபிறவி என மரணத்தை தாண்டியும், வாழ்க்கை விதிகளை வகுத்துவைத்துள்ள ஆன்மீகவாதிகளின் அடக்குமுறை ஒருபுறம். பிரபஞ்சம், பால்வெளி, பெரும்வெடிப்பு, சூரியன் அழியும், பூமி பிரளும் என புதுப்புது அர்த்தங்களை கூறும் அறிவியலின் அச்சுருத்தல் ஒருபுறம். ஆன்மீகமும் அறிவியலும் என்னென்னமோ சொன்னாலும் எதார்த்தத்திற்கும் நடைமுறை அரசியலுக்குமுள்ள தடுமாற்றங்கள் மறுபுறம். இத்தனை அறியாமைகளும் ஒன்றுசேர்ந்து நெருக்கும்போது எப்படி மனிதமனதுள் பொறுப்புணர்ச்சி வரும்?

கடவுள் இருக்கிறாரா? என்னை கண்காணிக்கிறாரா? புனிதயுத்தம் கடவுளின் கட்டளையா? தர்மயுத்தத்தில் ஈடுபடாமல் இருப்பது குற்றமா? அல்லது ஈடுபடுவது குற்றமா? வேதங்கள் தான் வாழ்க்கையின் நிர்ணயிககப்பட்ட சட்டங்களா? இயேசு கிறிஸ்துவா, அல்லாவா, இந்துத்துவ கடவுள்களா? அல்லது இதற்கெல்லாம் அப்பாற்பட்ட ஒருவரா?

யார் கடவுள், எந்த சக்தி கடவுளின் விதி? எது கடவுளின் வழி? அல்லது கடவுளே இல்லையா? எதை நான் பின்பற்றுவது? எது பாவம்? எது புண்ணியம்? இந்த உலகம் அழிவுக்காக படைக்கப் பட்டதா? இந்த உலகை தாண்டிய சொர்க்கலோகம் உண்டா? பிரபஞ்சம் வெடித்து சிதறிவிடுமா? நிச்சயமற்ற இந்த பிரபஞ்சத்தில் இருக்கும்வரை சுகபோகங்களை அனுபவித்துக் கொண்டால் தான் என்ன? - இப்படி மனதுக்குள் தெளிவு இல்லாத மக்களுக்கு எப்படி, அலட்சியம் அகன்று விழிப்புணர்வும் பொறுப்புணர்ச்சியும் வரும்?

அறியாமைகள் அகன்று அறிவுத்தெளிவு வராதவரை நல்லெண்ணவாத மக்கள் பொது பிரச்சனைகளில் இருந்து ஒதுங்கிக்கொள்ளவே செய்கிறார்கள். மதத்தின் பேரில் பிரச்சனையா அதை பற்றி எனக்கு தெரியாது, எனவே அதை தடுக்கவோ தீர்க்கவோ நான் முயல்வது சரிப்பட்டு வராது. எனவே ஒதுங்கிக்கொள்கிறேன். இப்படி ஒவ்வொரு பிரட்சனைகளிலும் நல்லெண்ணவாத மக்கள் ஒதுங்கிக்கொள்ளவே செய்கிறார்கள்.

விளைவு என்ன?

அநீதிகளும், சுயநலபோகங்களும் அசுரவேகத்தில் பெருகி, இன்று உலகே பேரழிவுக் கிடங்காகிக் கிடக்கிறது. அறியாமைகள் அகல வேண்டும் அப்போது தான் மனிதன் மனிதனாக வாழ முயற்சிப்பான். அறியாமைகள் அகலாமல் மனித குலத்தின் எந்த பிரச்சனைகளும் தீராது. தீர்க்கவும் முடியாது. முத்தாய்ப்பாய் சொன்னால் கடவுளே அவதாரம் எடுத்து வந்தாலும் கூட, அறியாமைகளை அகற்றாமல் மனிதகுல பிரட்சனைகளை தீர்க்க முடியாது.

சிவபெருமான் முதல் திருமூலர், கிருஷ்ணர், ராமர், புத்தர், மகாவீரர், வள்ளுவர், கிறிஸ்து, நபிகள், காந்தி, காரல்மார்க்ஸ், விவேகானந்தர், பெரியார், என இன்னும் இன்னும் எத்தனையோ மகான்கள் இந்த மண்ணில் உதித்தும் மனிதகுல பிரட்சனைகள் ஓய்ந்தபாடில்லையே ஏன்?

அறியாமைகளை போக்க முயற்சித்த கிருஷ்ணர், இயேசு, நபிகளார் போன்ற மகான்களின் போதனைகளே இன்று பகை போர், கலவரத்துக்கு காரணங்களாகிக் கிடக்கின்றனவே ஏன்?

எதனால் இந்த கொடூரம் நிகழ்ந்தது?

அவர்கள் நல்லதை விதைக்க ஏன் பலமடங்கு தீமைகள் விளைந்தது? மனித குலத்துள் பிரட்சனைகள் உதித்த காலம் தொட்டு தீர்வுகள் சொல்லிச்சொல்லி தலைமுறை தோறும் ஞானிகளும், மகான்களும் உதித்துக்கொண்டுதானே இருக்கிறார்கள். இத்துனை மகான்களும் ஞானிகளும் போதித்தும் மனிதகுல பிரட்சனைகள் இன்னும் ஓய்ந்தபாடில்லையே ஏன்?

மனிதகுல பிரட்சனைகள் தீர்க்கவே முடியாதவைகளா? மனிதனை ஆட்டிப் படைக்கும் அறியாமை அகலவே அகலாதா? அறியாமைகள் அகன்று அலட்சியப் போக்கு மாறி, பிரட்சனைகள் தீர்ந்து, சமத்துவமும் சமாதானமும் தவழும், புதிய யுகம் பிறக்கவே பிறக்காதா? - இப்படி ஒவ்வொரு எதார்த்த மனங்களும் ஏங்கத்தான் செய்கின்றன.

எதார்த்த சிந்தனையோடேயே தொடர்ந்து சிந்திப்போம். நமது ஆக்கப்பூர்வமான சிந்தனைகள், மனித குலத்தை ஆட்டிப்படைக்கும் அறியாமைகளுக்கும், பிரட்சனைகளுக்கும், முற்றுபுள்ளி வைக்கலாம் அல்லவா? உங்கள் சிந்தனைகளை அறிவகத்தோடு பகிர்ந்து கொள்ளுங்கள்... arivakam@gmail.com

தொடர்ச்சி., அடுத்த பதிப்பில்... (அறிவியலா ஆன்மீகமா?., பிரபஞ்ச தோற்ற இயக்க உண்மை தான் என்ன?)

பொது பிரட்சனைகளில் ஏன் ஒதுங்குகிறீர்கள்., மேலே உள்ள ஓட்டுபெட்டியில் ஓட்டு போட்டுட்டு போங்க...

10 comments:

 1. மனிதனின் தவறுகளுக்காக கடவுளைக் குற்றம் சாட்டுவது தவறு. நல்லதும் தீயதும் உலகில் உண்டு. நன்மை எது, தீமை எது என்று பகுத்து அறியும் அறிவை கடவுள் மனிதனுக்குக் கொடுத்துள்ளார். சிறு வயதிலிருந்தே நல்ல பண்புகளைக் கற்றுக் கொடுத்து, பெற்றோர்களும் முன்மாதிரியாக நடந்தால், பிள்ளைகள் வளர்ந்த பின் கேட்டுப் போகும் வாய்ப்புகள் மிகக் குறைவு.

  ReplyDelete
 2. வணக்கம் அறிவகம்,
  தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.நான் எப்போதும் உங்கள்(நல்லவர்கள் >) பக்கம் தான்.
  நன்றி
  ஆஸ்கார்பாரதி http://valkatamil.blogspot.com/

  ReplyDelete
 3. 'சிறு வயதிலிருந்தே நல்ல பண்புகளைக் கற்றுக் கொடுத்து, பெற்றோர்களும் முன்மாதிரியாக நடந்தால், பிள்ளைகள் வளர்ந்த பின் கேட்டுப் போகும் வாய்ப்புகள் மிகக் குறைவு. இது த‌வ‌றே; சூழல் ச‌க்தி மிக்க‌து. நன்மை எது, தீமை எது என்று பகுத்து அறியும் அறிவு மனிதனுக்குக் உண்டு.-- hifs@india.com
  இருப்பிடம் : SINGAPORE

  ReplyDelete
 4. tiGer ( tamillish) commented

  'மதங்கள் மனிதன் உருவாக்கியதுதான்; வானத்துளேந்து குதிச்சி வந்ததுமல்ல! அழ வைக்கும் எந்த மதமும் வேனாம்ங்க!...'

  ReplyDelete
 5. அறிவகம் உங்களது கட்டுரைகளை ஆர்வத்துடன் படிக்கின்றேன். அருமையானவை. ஆனாலும், சில விடயங்களுடன் எனக்கு உடன்பாடு காணமுடியவில்லை.

  அவைபற்றி எனது கருத்துக்கள் இங்கே.


  //முத்தாய்ப்பாய் சொன்னால் கடவுளே அவதாரம் எடுத்து வந்தாலும் கூட, அறியாமைகளை அகற்றாமல் மனிதகுல பிரட்சனைகளை தீர்க்க முடியாது.//

  எந்த கடவுள் அவதாரம் எடுத்து வருவது? இந்த அவதாரம் என்ற இந்து மத கொள்கை தானே, இந்தியாவுக்கு பெரிய தையிடியாக போய்விட்டது. பாலியல் துபிரயோகி, சாயி பாபா, பாலியல், வன்முறையாளன், பபிரேமானந்தா, இன்னும் மக்களை ஏய்த்துக்கொண்டிருக்கும் கல்கி பகவான், மேல்மருவத்தூர் அம்ம, என்று பல ஏமாற்ருக்காரர்களுக்கு இடம்கொடுத்திருப்பது இந்த் அவதாரம் என்ற விடயம் தானே. இதைப்போய் நீங்களும் இங்கே வலியுறுத்துகின்றீர்களே!

  //சிவபெருமான் முதல் திருமூலர், கிருஷ்ணர், ராமர், புத்தர், மகாவீரர், வள்ளுவர், கிறிஸ்து, நபிகள், காந்தி, காரல்மார்க்ஸ், விவேகானந்தர், பெரியார், என இன்னும் இன்னும் எத்தனையோ மகான்கள் இந்த மண்ணில் உதித்தும் மனிதகுல பிரட்சனைகள் ஓய்ந்தபாடில்லையே ஏன்?//

  அதெப்படி, சிவபெருமானையும், கிருஷ்ணரையும், ராமரையும், இங்கே குறிப்பிட்ட மற்ற மனிதர்களுடன் உங்களுக்கு ஒப்பிட முடிகின்றது? இவையெல்லாம் இந்து மத கற்பனைப்பாத்திரங்களல்லவா? இவை தவிர இந்து மதத்தில் இன்னும் நூற்றுக்கணக்கான கற்பனைப்பத்திரங்கள் உள்ளனவே. இன்னுமின்னும் உருவாக்கிக்கொண்டிருக்கின்றார்கள்.

  //அறியாமைகளை போக்க முயற்சித்த கிருஷ்ணர், இயேசு, நபிகளார் போன்ற மகான்களின் போதனைகளே இன்று பகை போர், கலவரத்துக்கு காரணங்களாகிக் கிடக்கின்றனவே ஏன்?//

  மீண்டும், தயவு செய்து கிருஷ்ணரை கொண்டுவந்து இயேசு, நபிகளாருடன் ஒரே பெட்டியில் போட்டுவிட்டீர்கள். மூன்று பெயர்களினதும் இயல்புகள் வேறு வேறானவை.

  ReplyDelete
 6. திரு. மதுவர்மன் தங்கள் கேள்விகளுக்கு இங்கு மேலோட்டமான பதிலை தருகிறேன். விரிவான விளக்கங்களை மனிதகுல ஆன்மீக பிரட்சனைகள் பகுதியில் தருகிறேன். பிரபஞ்சம் குறித்த சில அடிப்படை விடயங்களை அறிவியல் ரீதியில் புரிந்து கொண்ட பின்னர் தங்களின் கேள்விக்கான விளக்கங்கள் எளிமையாகிவிடும்.

  1. எந்த கடவுள் அவதாரம் எடுத்து வருவது?

  கடவுள் என்பது காலத்தை கையாளும் அறிவு. அதாவது மனிதவாழ்க்கைக்கு ஆக்கபூர்வமான அறிவு. இது எதுவானலும் அது கடவுளின் அவதாரம் தான். கடவுள் முழு மனிதனாக அவதாரம் எடுப்பது என்பது சாத்தியமற்றதாகவே எனக்கு தோன்றுகிறது. அறிவு தான் கடவுள். அதை குறிப்பிட்ட உடலில் அடைக்க முற்பட்டால் குறிபிட்ட அறிவுகள் தான் சாத்தியப்படுமே ஒழிய முழுமுதல் கடவுள் சாத்தியப்படாது.

  2. அவதாரம் என்பது இந்து மத கொள்கை தானே.

  அவதாரம் என்பது பிறந்து வருவது. பிறப்பு என்பது உடல்பிறப்பு மட்டுமல்ல, அதேபோல மனிதபிறப்பு மட்டுமல்ல. இங்கு பிறப்பு என்பது அறிவுபிறப்பாகவே சொல்லப்படுகிறது. அறிவின் ஊடகம் உடல். எனவே அறிவோடு உடலும் இணைந்துகொள்கிறது அவ்வளவே. இந்த அவதாரக்கொள்கை இந்து மதத்தில் மட்டுமல்ல எல்லா மதங்களிலுமே இருக்கிறது. மதங்கள் அவதாரத்தை உடலாக மட்டுமே வர்ணிக்கிறது. அதனால் தான் அவதாரம் போலியாகிறது.

  3. சாயிபாபா, கல்கி, மேல்மருவத்தூர், போன்றவர்கள் அவதாரம் என்ற கொளகையை வைதது தானே மக்களை ஏமாற்றுகிறார்கள்?

  கல்கி, மேல்மருவத்தூர், சாயிபாபா, இவர்கள் எல்லோரும் கடவுள் அவதாரம் என்று மக்களை ஏமாற்றுகிறார்கள் என்றால் நிச்சயம் சபிக்கபட்டவர்கள்தான். அவர்கள் மனித குலத்துக்கும் சாபகேடு தான். ஆனால் அவர்களிடமும் அறிவின் அவதாரம் இருக்கிறது. (இவர்களுக்குள் இருக்கும் அறிவு என்ன? அதை வைத்து மக்களை எப்படி ஏமாற்றுகிறார்கள் என்பது குறித்த விரிவான விளக்கங்களை மனித குல ஆன்மீகப்பிரட்சனைகள் பகுதியில் தருகிறேன்.)

  5. சிவபெருமான், கிருஷ்ணரையும் ஏன் இயேசு, நபி, காந்தி இவர்களோடு ஒப்பிடுகிறீர்கள்?

  மனித வாழ்க்கை மேம்பாட்டிற்கு வழிகாட்டிய அறிவாளர்கள் எல்லோரும் மகான்களே. அவர்கள் அறிவியலாள்ரகள் அனாலும் சரி, ஆன்மீகவாதிகள் ஆனாலும் சரி, சாதாரன மனிதர்களானாலும் சரி.

  இயேசுவும் நபிகளும் வாலாறு தெரிந்த 2000 ஆண்டுகளுக்குள் பிறந்தவர்கள் என்பதால் அவர்களை நாம் மண்ணில் பிறந்த மகான்களாக ஏற்றுக்கொள்கிறோம். அதேபோல இந்து மதம் கடவுள்களாக சொல்லும் கிருஷ்ணர், சிவபெருமான் போன்றவர்கள் மண்ணில் பிறந்து வாழ்ந்தவர்களாக தான் இந்துமத கதைகள் சொல்கின்றன. காலம் தான் அறியகிடைக்கவில்லை.

  இங்கு அவர்கள் மண்ணில் மனிதனாக பிறந்து வாழ்ந்தார்களா? இல்லையா என்பதை என்னால் உறுதியாக சொல்லமுடியாது. ஆனால் சிவபெருமான், கிருஷ்ணர் போன்றவர்கள் பிறந்து வாழ்திருக்க சாத்திய்ககூறுகள் இருக்கின்றன. அவர்கள்பால் தொடர்புடைய அறிவு இன்றும் மனிதகுலத்தில் இருக்கிறது.( விரிவான விளக்கம் மனிதபிறவியும் தொடர் வாழ்க்கையும் பகுதில்)

  இயேசு பிறந்தார், வாழ்ந்தார் என்பதை இன்று எல்லோரும் ஏற்றுக்கொள்ள காரணம். இயேசுவின் பிறப்பை வைத்து கணிக்கபட்ட காலெண்டர், மற்றும் இஸ்ரேல் நாட்டில் இன்றும் காணகிடக்கும் இயேசு தொடர்புடைய சில பொருட்கள், சூழல்கள் தான். அதேபோல தமிழர்கள் நாம் திருவள்ளுவர் பிறப்பை கணித்து ஒரு நாட்காட்டியை பின்பற்றுகிறோம். இதெல்லாம் எவ்வளவு தூரம் துல்லியம் என்பது நமக்கு தெரியாது. திருக்குறள், செவிவழி செய்திகள் இவற்றை வைத்து தான் நாம் திருவள்ளுவரை அடையாளம் கண்டுள்ளோம். அதற்காக திருவள்ளுவரையும், இயேசுவையும் கற்பனை கதாபாத்திரம் என்றா சொல்கிறோம்? அதே போல தான் சிவபெருமானும், கிருஷ்ணரும்.

  இன்று சிவபெருமான் உட்பட இந்து கடவுள்களை கற்பனை என சொல்ல காரணம் அவர்களை சுற்றி பின்னபட்ட பல புனைகதைகள் தான். இது போட்டி பொறாமைகளுக்காகவும், அதீத நம்பிக்கைகளாலும், அறியாமைகளாளும் சொல்லபட்டவை.

  இங்கு கருத்தில் கொள்ளவேண்டியது என்னவென்றால் சிவபெருமானாகட்டும், இயேசுவாகட்டும், நபிகளாகட்டும், காந்தியாகட்டும், காரல்மார்க்ஸ் ஆகட்டும் இவர்கள் எல்லாம் மகான்கள் தான். இவர்ளின் அறிவுத் தொடர்புகள் மனிதகுலத்தில் தொடர்ந்து ஆக்கம் கொள்கிறது.

  இவர்கள் மட்டுமல்ல என்னுடைய உங்களுடைய என எல்லோருடைய தாத்தா, பாட்டி, என இறந்த நமது வழிவழி சந்ததியினரின் அறிவுத்தொடர்பும் மனிதகுலத்தில் ஆக்கம கொண்டுகொண்டு தான் இருக்கிறது. இவற்றை அறிவியல் நிரூபனங்களுடன் மனிதபிறவியும் தொடர் வாழ்க்கையும் பகுதியில் பார்க்கலாம். நன்றி.

  ReplyDelete
 7. aiyya,

  Madhu varman avarkalae

  "அதெப்படி, சிவபெருமானையும், கிருஷ்ணரையும், ராமரையும், இங்கே குறிப்பிட்ட மற்ற மனிதர்களுடன் உங்களுக்கு ஒப்பிட முடிகின்றது"

  Muthalil thangal ondrai purinthu kolla vendum Siva peruman, Krishnar, Ramar anaivarum kadvulin avatharangalo (or) karpanai kathapathhirangalo illai. "manitharkal" than,

  Nabi, Easu, Gandhi, Periyar pol avarkalum oru kalathil mahankalaha vazhnthu irukkavendum.

  Nabi, Easu, Gandhi, Periyar vazhntha kalangal namakku irukkum varalarai vaithu solkireerkal.

  Innum 500 varudangalukku piraku periyarea kadavul analum achariya pada vendam "Ubayam periyar silai"

  2000 varudangalukk munthaiya Easu, 1800 varudangalukku munthaiya Nabi, 100 Varudangalukku munthaiya Gandhi, Periyar

  Ivarkalodu oppidum podhu 2500, 3000 varudangalukk munthaya sivan, krishnan, ramar pondrorai patriya varalaru namakku theriya vaippillathathal athai karpanai kathapathiram enkirom, innum 1000'm varudangalukku Gandhi mathiri unmai pesupavarkalai, Periyar mathiri nathikam pesupavarkalai pattri Pattimandram than nadakkum
  Ippadi oruvar irunthara / Illaiaya,

  Gandhi Ahimsavathiya?Himsavathiya?

  Periyar oru anmiha vathi? Om, Illai?

  Endru kalam chella chella makkal Num munnorkalai kadavulaka parppathu nam Indrum seyum oru pazhakkam.

  Nam veetil kuda Ththa, Patti, Padangalai vaithu vazhi padukirom,
  Avarkalai thievamaha vanangukirom,

  Innum 10 santhathiayar ahivittal intha thatha patti than "KULA THEIVAM"

  so, Yarum Karpanai kathapathhiram alla

  Karpanai kathapathiram endral Num "thatha, patti" 10 thalaimuraikalukku piraku karpanai kathapathiram than eanendral avarkalin padam kuda andru kidaikkathu"

  ReplyDelete
 8. திரு.ராமநாதன் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி. தொடர்ந்து அறிவகத்தில் உங்கள் ஆலோசனைகளை பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி

  ReplyDelete
 9. we are all follows vivekananda ways then only you say the problem is solved
  when all the peoples are
  "AWAKE AND AWARE"
  then only all problems are solved
  i am wait for your answer

  ReplyDelete