Tuesday, July 15, 2008

இயேசுவும் அல்லாவும் ராமரும் காப்பாற்றுவார்களா? ( உலகின் அவசரத்தேவை - 3)

அணுஆயுதங்களை போருக்கு பயன்படுத்தமாட்டார்கள், அது பயமுறுத்தலுக்கும் பாதுகாப்பிற்கும் மட்டுமே; என நினைத்துக்கொண்டிருக்கும் எதார்த்தவாதிகளுக்கு ஒரு எச்சரிக்கை! அணுஆயுதங்கள் என்பது பற்றவைத்தால் மட்டுமே பற்றிவெடிக்கும் பட்டாசுகள் அல்ல, பற்றவைக்காமல் பூச்சாண்டி காட்டிக்கொண்டிருக்க. இயல்பிலேயே வெப்பமாற்றங்களால் பாதிக்கப்படும் ஒரு அபாயகர அமைப்புதான் அணுஆயுதம். யாரும் உபயோகிக்க தேவையில்லை, அணுஆயுத கிடங்கில் ஏதெனும் ரசாயனமாற்றங்கள் நிகழ்ந்தாலோ, அல்லது கிடங்கு அருகே சிறிய நிலஅதிர்ச்சி வந்தலோ£ போதும் அணுஆயுத கிடங்கோடு பல்லயிரம் கீ.மீ நிலப்பரப்பும் வெடித்து சிதறி சாம்பலாகிவிடும்.

போர் என்றால் எல்லைகோட்டில் இராணுவங்கள் மட்டுமே மோதிக்கொள்ளும், நாம் பாதுகாப்பாக இருந்து கொண்டு பொருளுதவி மட்டும் செய்தால் போதும்; என்ற போலி நம்பிக்கையில் மூச்சுவிட்டுக் கொண்டிருக்கும் எதார்த்தவாதிகளே; அணு ஆயுதப்போர் என்பது எல்லையில் ராணுவங்கள் மட்டும் மோதிக்கொள்ளும் போர்அல்ல. நாம் பாதுகாப்பாக நம்வீட்டு தொலைகாட்சி முன் அமர்ந்து கொண்டு வெற்றி தோல்விகளை ரசித்துக் கொண்டிருக்க. எதிரி எங்கு எவ்வித தாக்கதல் நடத்தப்போகிறான், நாம் எந்த வகை எதிர்தாக்குதல் நடத்தப் போகிறோம், எப்படி தற்காத்துக் கொள்ளப் போகிறோம்? என்பவை ராணவத்திற்கே கடைசி நிமிடம்வரை கேள்விக்குறிதான். அந்தளவுக்கு விதவிதமான ஆயுதங்கள் நாட்டுக்கு நாடு மறைக்கப் பட்டுள்ளது. அதீதமாக சொன்னால் சுய ஆயுதங்களை கையாளவே திண்டாடும் நிலையில்தான் இன்றைய ராணுவங்களும் உள்ளன. ராணுவத்திற்கே தற்காப்பு கேள்விக் குறியாக இருக்கும்போது பொதுமக்களின் நிலையை யோசித்துப் பாருங்கள்?

பேரழிவுஆயுதங்கள் என்பது பற்றவைத்தால் பற்றிக்கொள்ளும் பட்டாசுகள், அதுபட்ட இடத்தில் மட்டுமே தீ பற்றி எரியும், எப்படியும் தற்காத்துக்கொள்ளலாம் என இன்றுவரை நிம்மதிப் பெருமூச்சு விட்டுக்கொண்டிருக்கும் எதார்த்தவாதிகளுக்காக மட்டும் இரண்டே உதாரணங்கள்:-

வாக்கும்பாம்ஸ் என்றொருவகை ஆயுதம். இதை காற்றில் தூவவிட்டால் போதும் காற்று பரவும் திசையெங்கும் விஷம் பரவும். நீர்நிலைகள், உணவு தாவரங்கள் அனைத்திலும் விஷம்கலக்கும். விஷக்காற்றை நூகர்ந்த புல், பூண்டு முதல் விலங்குகள், மனிதன் என அனைத்து உயிர்களும் மூச்சு திணறி சாகும்.

அடுத்து உயிர்கொல்லி கதிர்வீச்சு ஆயுதங்கள்: காற்றில் நீரில் உயிர்கொல்லி நோய்க் கிருமிகள் பரப்பப்பட்டால் ஒவ்வொரு மனிதனும் நோய்தொற்றி அல்லோலப்படுவான். உயர்கொல்லி கதிர்வீச்சால் உடலெங்கும் உஷ்ணம் பெறுத்து ரத்தகுழாய்கள் வெடிக்கும். உடலில் கொப்பளங்களும், சீலும், நீறும் வடியும், துர்நாற்றம் வீசும், சதைஅழுகிதொங்கும், கணத்துக்குகணம் அணு அணுவாய் துடித்து துடித்து சாவோம். நரம்புமண்டல கதிர்வீச்சு ஆயுதங்களால் பார்வை பறிபோகும், மூளை செயல் இழக்கும், உடலில் இரத்த ஓட்டம் உறைந்து குஷ்டமும் இயலாமையும் நிலவி, இறுதியில் கோமா நிலைக்கு தள்ளப் படுவோம். இது மரணத்தை விட கொடுமையானது.

இதெல்லாம் தெரிந்த பாதிப்புகள். தெரியாத பாதிப்புகள் எத்தனையோ! அணுஆயுதங்களின் கோரம் ஜப்பான் நாட்டின் ஹிரோசிமா, நாகசாகி நகரமக்களுக்கு தெரியும். லட்சக்கணக்கானோர் மாண்டது ஒருபுறம்., ஆனால் அணுஆயுத கோரத்தில் அடிபட்டு மீண்டவர்கள், ஐம்பது வருடங்களுக்கு மேலாகியும் இன்றும் நரக வேதனையோடு தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஆரம்பகட்ட அணுகுண்டானதே அந்த அளவுக்கு பேரழிவை ஏற்படுத்தியிருக்கம் போது, இன்றைய நவீன அணுஆயுதங்களின் விளைவு எந்தளவுக்கு இருக்கும் என நீங்களே யூகித்துப் பாருங்கள்.

அரசியல் வீம்பு, அதிகார அத்துமீரல், தீவிரவாதம், என எல்லாம் சேர்ந்து அணுஆயுதப்போர் வருகிறது. நாட்டுக்கு நாடு வானின்று குண்டுமழை பொழிகின்றன. குண்டுகள் விழுந்த இடமெல்லாம் நிலம் வெடித்துச் சிதறுகிறது. எங்கும் நிலஅதிர்ச்சி, அனல்காற்று, உலகே தீயில் பற்றி எரிகிறது. எங்கும் புகை, வெடிப்பு, கொந்தளிப்பு., வெடிப்புத்தீயில் சிக்கிய மனிதர்கள், விலங்குகள் கைசிதறி, கால் சிதறி, தலை சிதறி கொத்துக்கொத்தாய் தூக்கி எரியப்படுகின்றனர். சுவாசிக்க திணறி ஒவ்வொரு உயிரும் துடிதுடிக்கிறது. மரணக்கூக்குரல்களும் அணுபிளவு சத்தங்களும் ஒன்றைஒன்று மிஞ்சிக்கேட்கின்றன. பிஞ்சுகுழந்தைகள், செல்லப் பிராணிகள், தீயில் கருகும் தருணம், எங்கும் ரத்தம் ஆராய்ஓடும் கோரம். யார்? யாரை காப்பாற்ற முடியும்? வரண்டு தாகம்தாகம் என துடிக்கும் நாவுகளுக்கு ரத்த ஆறு தீர்வாகுமா?

இன்னும் ஆழமாகவே அந்த கோரத்தை கண்முன் நிறுத்திப்பாருங்கள்

இயற்கைசீற்றங்களில் இருந்துதான் இறைவன் காப்பார் எனநம்பியிருக்கலாம். ஆனால் அணுஆயுத தீயினின்று நம்மை காக்க எந்த சக்தி உள்ளது. நாம்பெற்ற நம் செல்லக் குழந்தைகள், நம்மை பெற்ற பெற்றோர்கள், நம் நண்பர்கள், நம் உறவினர், நம் குடும்பம், நம் காதல், கூடவே நாமும் தீயில் எரியும் அந்த ரணகளத்தில், சுண்டிப்போன நம் நாவுகள் எதை சொல்லி துடிக்கும்? யாரை கூவி அழைக்கும்? ‘‘ஆண்டவனே, ஐயப்பா, முருகா, இயேசுவே, அல்லா, ராமா, கருமாயி, மகமாயி, ஈஸ்வரா, யார்? யார்? யார்நம்மை காப்பாற்றுவார்கள்? யாரால் நம்மைகாப்பாற்ற முடியும்?

அப்படியே இறைவன்தோன்றி காப்பதாக கருதினாலும் அநத தருணத்தில் அரேபிய நாட்டில் சிவபெருமானும், இந்துத்துவ நாட்டில் இயேசுவும், கிறிஸ்துவநாட்டில் அல்லாவும் தோன்றினால் என்னபயன்? யார் யாரை காப்பாற்றுவார்? இதற்கு மத அமைப்புகளால் என்ன பதில் சொல்லமுடியும்?, மத கலவரத்தால் தான் போர் மூண்டிருக்கும் பட்சத்தில் மத அமைப்பாளர்கலால் பதில் சொல்லமுடியுமா? அல்லது அந்த கடவுள்களால் தான் பதில் சொல்ல முடியுமா? உங்களுக்குள்ளேயே விடைதேடிப்பாருங்கள்...

கும்பகோணத்தில் கொடூர தீயில் கருகிய கள்ளம் கபடமில்லாத பிஞ்சுகளை எந்த கடவுள் காப்பாற்றினார்? மனசாட்சியைத் தொட்டு உங்களுக்குள்ளேயே பதில் சொல்லிக்கொள்ளுங்கள்.

தொடர்ச்சி... அடுத்த பதிப்பில் (முன்னால் குடியரசு தலைவர் அப்துல்கலாமிடம் ஒரு கேள்வி.)

10 comments:

 1. ஹ்ம்ம் .. நம்மை சாராத பிரச்சனை என்று எந்த சாமானியனும் அக்கறை இன்றி உட்கார்ந்திருக்க கூடாது என்று சொல்றீங்க .. சரி அரசாங்கம் எடுக்கும் முடிவுக்கு தேர்தல் நேரம் தவிர மக்கள் எந்த வகைல எதிர்ப்பை காமிச்ச அரசாங்கம் பின்வாங்கும்-நு நெனைக்குறீங்க ?!

  ReplyDelete
 2. வருகைக்கு நன்றி யாத்திரீகன். உங்கள் கேள்விக்கான பதில் தான் அடுத்த பதிப்பில்( அப்துல்கலாமிடம் ஒரு கேள்வி) இடம்பெறப்போகிறது. தொடர்ந்து ஆலோசனைகளை தாருங்கள்.

  ReplyDelete
 3. வருகைக்கு நன்றி மருதநாயகம்.

  ReplyDelete
 4. பாம்புகள் அலையும் மலைப்பகுதியில சஞ்சாரம் செய்யும் போது கையில எடுத்துட்டு போற தீப்பந்தம், கழி மாதிரி தான் ஆயுதங்களும் இருக்கணும், ஒரு முன்னெச்சரிக்கையா. ஆனா செத்த பாம்பை அடிக்கிற மாதிரி சதாமுக்காக ஈராக்கை நாசம் பண்ணினது மாதிரி நடவடிக்கைகள் தான் இப்போ நடக்குது.

  ReplyDelete
 5. வருகைக்கு நன்றி கடுகு. இது போன்ற அதிகார அத்துமீரல் குணம் கொண்ட சர்வதேச அரசியல்வாதிகளின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்தி, எப்படி உலகை சமாதானபாதைக்குள் திருப்புவது. அதில் நம்மைபோன்ற சாமானியர்களின் கடமை என்ன? என்பதை தான் கட்டுரையில் தொடர்ந்து அலசப்போகிறோம். தொடர்ந்து ஆலோசனைகளை தாருங்கள். நமது ஆக்கப்பூர்வமான சிந்தனைகள் உலகுக்கு விடிவெள்ளியாகலாம் அல்லவா!

  ReplyDelete
 6. மதம் என்பது ஒவ்வொரு மனிதனும் தனிப்பட்ட முறையில் பின்பற்றுவதற்காக மட்டுமே. மதத்தை அரசியல் ஆதாயத்திற்காகப் பயன்படுத்தினால் தீமையே விளையும்.

  ReplyDelete
 7. மதம் என்பது ஒவ்வொரு மனிதனும் தனிப்பட்ட முறையில் பின்பற்றுவதற்காக மட்டுமே. மதத்தை அரசியல் ஆதாயத்திற்காகப் பயன்படுத்தினால் தீமையே விளையும்.

  ReplyDelete
 8. மனிதனின் தவறுகளுக்காக கடவுளைக் குற்றம் சாட்டுவது தவறு. நல்லதும் தீயதும் உலகில் உண்டு. நன்மை எது, தீமை எது என்று பகுத்து அறியும் அறிவை கடவுள் மனிதனுக்குக் கொடுத்துள்ளார். சிறு வயதிலிருந்தே நல்ல பண்புகளைக் கற்றுக் கொடுத்து, பெற்றோர்களும் முன்மாதிரியாக நடந்தால், பிள்ளைகள் வளர்ந்த பின் கேட்டுப் போகும் வாய்ப்புகள் மிகக் குறைவு.

  ReplyDelete