Friday, July 25, 2008

அணுசக்தி ஒப்பந்தம் இந்தியாவுக்கு தேவையா?(உலகின் அவசரத்தேவை -5)

(இந்த பதிவு முதல் சூடனான விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாத அரசியல் விவாதங்களுக்குள் நுழையலாம் என்றிருந்தோம். ஆனால் டாக்டர். அப்துல் கலாமிடம் ஒருகேள்வி பதிப்புக்கு பின்னர் அணுவியல் துறை உட்பட பலத்துறை வல்லுனர்களும் அறிவகத்துககு பல கேள்விகளை அனுப்பியிருந்தனர். கேள்வி - பதில்களை அனைவருக்கும் தர கடமைப்பட்டுள்ளோம்.)


பேரழிவு ஆயுதங்கள் இருப்பதற்கு என்ன ஆதாரம்?
·
1945 முதல் இதுவரை உலகில் 1,28,000 அணுகுண்டுகள் தயாரிக்கப்பட்டுள்ளன.
· பல்வேறு அணு ஆயுத ஒழிப்பு ஒப்பந்தக்களுக்கு பிறகும் உலக நாடுகளிடம் ஏறத்தாழ 27,000 ரக அணு ஆயுதங்கள் தற்போதும் உள்ளன. இவற்றை பல நாடுகளும் பகிரங்கமாக ஒப்புக்கொண்டுள்ளன.( ஒப்புகொண்டது மட்டும் இவ்வளவு! மறைக்கப்பட்டுள்ளது எவ்வளவோ?)
· அணு ஆயுத நாடுகள் என அறிவிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்காவில் 10,104 அணுகுண்டுகள் ரஷியா -16,000, பிரான்ஸ் -350, இங்கிலாந்து -200, சீனா- 200. என பகிரங்கமாக்கப்பட்டுள்ளது. அணு ஆயுத நாடுகள் என அறிவிக்கப்படாத இந்தியா, பாகிஸ்தான் போன்ற நாடுகளில் மொத்தம் 110 க்கும் மேற்பட்ட அணு குண்டுகள் இருக்கலாம் என சர்வதேச அணுஆயுத ஒழிப்பு குழு கணித்துள்ளது.
· 1945 முதல் இதுவரை 2,051 அணுவெடிப்பு சோதனைகள் நடைபெற்றுள்ளன. இவற்றில் 528 வான்வெளியில் நடத்தப்பட்டவை.(கொடுமையிலும் கொடுமை)
· 1972-ல் பேரழிவு ஆயுதங்கள் ஒழிப்பதற்காகவே சர்வதேச உயரியல் ஆயுதங்கள் ஓழிப்பு மாநாடு நடந்தது.
· 1972 மாநாட்டு விதி முறைகளை மீறாத செயல் என கூறி அமெரிக்கா, ரஷ்யா போன்ற பெரிய நாடுகள் நோய்கிருமி ஆயுதங்களுக்கு எதிரான மருந்துவ ஆராய்ச்சி என்ற பெயரில் இன்றளவும் பேரழிவு நோய்கிருமி ஆயுதங்களை வைத்துள்ளன.
· 1990ல் ஈராக்கில் 5 ஆராய்ச்சி சாலைகளில் மறைத்து வைக்கப்பட்ட அந்த்ராக்ஸ், போடுலிஸம், கெங்ரேன் பாக்டிரியா போன்ற பேரழிவு கிருமிகள் கண்டுபிடிக்கப்பட்டது.
· இரண்டாம் உலகப் போரின் போது, ஜப்பான் நாடு, சீனாவுக்கு எதிராக கிருமிகளை ஆயுதங்களாகப் பயன்படுத்தியது.
· வியட்நாம் போரின்போது 'ஏஜென்ட் ஆரஞ்ச்' என்ற ஒருவகை இரசாயன ஆயுதத்தை அமேரிககா பயன்படுத்தியது.

இயக்கை சீற்றங்களால் அணுஆயுத விளைவுகள் வராதா?
· ரஷ்யாவின் செர்நோபில் அணுஉலை 1988ல் வெடித்தது. அதில் வெளியாகிய கதிர்வீச்சு பல்லாயிரம் கி.மீ கடந்து பல நாடுகளிலும் ஆபத்தை விளைவித்தது பின்னர் கண்டுபிடிக்கப்பட்டது
· சமீபத்தில் 2007 ஜூலை 16ல். ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் காஷிவாஸாகி-கரிவா அணுமின்சக்தி நிலையம் பெரிதும் பாதிக்கப்பட்டது, கதிரியக்கக் கழிவுநீர்க் கசிந்து கடலில் கலந்தது.
· போபால் இராசயனக் கூடத்தில் 1984 ஆண்டு வெளியேறிய விஷ வாயுத் தாக்குதலில் ஆயிரக்கணக்காணர் மாண்டனர்!
· இயற்கைக் கதிரியக்கம் கண்டு பிடித்து நோபெல் பரிசு பெற்ற கியூரி தம்பதியினரும் செயற்கைக் கதிரியக்கம் உண்டாக்கி நோபெல் பரிசு பெற்ற அவரது மகள் ஐரீன் கியூரியும் தீவிரக் கதிரடி வாங்கி Leukemia நோயில் முதன் முதல் கதிரியக்கத்திற்கு பலியானர்கள்!
· ஒவ்வொரு அணு ஆயுத சோதனைக்கும் 10,000 பேர் இறப்பர் என சோவியத் விஞ்ஞானி ஆந்ரேய் சகாரவ் கணக்கிட்டுள்ளார். கதிர்விச்சின் பாதிப்பு கணக்கிலடங்காதது.
· பல நாடுகளும் பாதுகாப்பு, கௌரவம் கருதி அணுஉலை வெடிப்புகளை வெளியில் சொல்வதில்லை.

பெருமளவில் மாசு எதனால் நிகழ்கிறது?
· அமேரிக்கா உட்பட 5 அணுஆயுத நாடுகள் இதுவரை வான்வெளி நடத்திய 528 அணுகுண்டு சோதனையால் பல லட்சம் மெகா டன் கார்பன்14 மாசு வாயுவில் கலந்துள்ளது. 545 மெகா டன் வெடிப்பு திறனால் எற்பட்ட கதிர்வீச்சால் இன்றும் நாம் பாதிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறோம்.
· அணுஆயுத கழிவுகள் எற்படுத்தும் மாசுவுக்கு கணக்கே இல்லை. 10ஆண்டுகள் மனிதன் இயற்கையில் ஏற்படுத்தும் மாசுவை விட ஒரு அணுஆயத சோதனையினால் ஏற்படும் மாசு அதிகம்.( அணுசோதனைகளால் வளிமண்டல மாசு மட்டுமல்ல நீர், நிலம், உணவு, மனிதஉடல் என அனைத்திலும் மாசு ஏற்படுகிறது)
· நோய்கிருமி, விஷவாயு ஆயுதங்களுக்கு மாற்று மருந்துகளே கிடையாது. எல்லோரும் கவசம் அணிந்து சுற்ற வேண்டியது தான். உணவு தாவரங்கள், விலங்குகளுக்கு கூட கவசம் அணியும் கட்டாயம் ஏற்படும் காலம் வெகுதூரமில்லை.

அணுஆயுதங்களை வைத்துக்கொண்டு வறுமையை ஒழிக்க முடியுமா?
· அணு ஆயுதங்களைத் தாங்கிச் செல்லும் ஏவுகணைகள் தயாரிப்பு, அணு ஆயுதம் ஏந்தும் நீர்மூழ்கிக் கப்பல் வாங்குவது, கட்டுப்பாட்டு அமைப்பை உருவாக்குவது ஆகியவற்றை உள்ளடக்கிய இந்திய அணு ஆயுதத் திட்டத்துக்கு ஆண்டுக்கு குறைந்தபட்சம் ரூ.8,000 கோடி வரை செலவாகும் என கணக்கிடப்பட்டுள்ளது
· அணுஆயுத கழிவுகளை பாதுகாப்பாக புதைக்க செலவிடும் தொகை கணக்கிலடங்கா? இந்தியா போன்ற நாடுகள் இதில் இன்றளவும் வெளிப்படையை கையாளவில்லை.
· ஒவ்வொரு நாடும் அணுஆயுத தயாரிப்புக்கும், ராணுவ தளவாடங்களுக்கும் செலவிடும் தொகை அடிப்படை கல்விக்கு செலவிடும் தொகையை விட இரண்டு மடங்கு அதிகம்.

அணுஆயுதங்களை ஒழிக்க முயற்சிகள் நடக்கிறதா?
· அணுஆயுத ஒழிப்பு முயற்சிகளில் இன்றளவும் வல்லரசு நாடுகள் உட்பட பல நாடுகள் பித்தலாட்டமே செய்து விருகின்றன. முழுமையான அணுஆயுது ஒழிப்பு மசோதாவை இன்றுவரை அமேரிக்க நாடாளுமன்றம் நிறைவேற்றியதில்லை.
· 1972 உயிர்கொல்லி ஆயுத ஒழிப்பு மாநாட்டு திட்டங்களுக்கு எந்த நாடும் முழுமையாக கட்டுபட்டு கையெழுத்திட்டதில்லை.
· இன்று கூட அணுஅயுத சோதனைகள் உலகில் தடையின்றி தொடந்துகொண்டுதான் இருக்கிறன.
· வல்லரசு நாடுகளில் சில நாடுகள் தீவிரவாதிகளிடம் அணுஆயுதங்களை கொடுத்து மறைமுக சோதனைகளை சாதித்துக்கொள்கின்றன என்பது ஜீரணிக்கமுடியாத உண்மையாக உள்ளது.

ஆணுஆயுதங்களை ஆக்க சக்தியாக பயன்படுத்த முடியுமா?
· அணுஆயுதங்களை ஒருபோதும் ஆக்க சக்தியாக பயன்படுத்த முடியாது. இதுவரை உருவாக்கிவைத்துள்ள ஆயுதங்களை அழிக்க நினைத்தாலும் பல மெகா டன் மாசு வெளியில் கலக்கும் என்ற உண்மையை கடவுளை வேண்டிக்கொண்டு ஜீரணித்துதான் ஆகவேண்டும்.
· அணுசக்தியை ஆக்கபூர்வமாக பயன்படுத்தலாமே ஒழிய பேரழிவு ஆயுதங்களாக தயாரிக்கப்படும் அணுசக்தியை ஒருபோதும் ஆக்க சக்தியாக பயன்படுத்த முடியாது என்பதை எல்லோரும் எதார்த்தமாக புரிந்துகொள்ள ஏன் தான் மறுக்கிறார்களோ இறைவா?
· இங்கு குறிப்பிடபட்டுள்ள ஆதாரங்கள் மிகமிக குறைவானவையே. அணுகதிர்வீச்சு, பேரழிவு நோய்கிருமிகளின் தாக்கம், அணுகழிவுகளின் பாதுகாப்பற்ற புதைப்பு இவற்றை பற்றி எழுதினால் பக்கங்கள் பத்தாது. அதைபடித்து ஜீரணிக்க நமது மென்மையான மனசுகளும் தாங்காது. அந்தளவுக்கு கொடுமையானது.(உலக அரசியல் தலைவர்களே, அறிவியல் அறிஞர்களே தயவுகூர்ந்து உலகின்பால் இரக்கம்காட்டுங்கள்.)

அணுசக்தி ஒப்பந்தம் இந்தியாவுக்கு தேவையா?
· இந்த கட்டுரைக்கு நேரடி சம்மந்தமில்லாதது என்றாலும் தற்போதைய பரபரப்பு செய்தி என்பதால் பலரும் இந்த கேள்வியை தான் கேட்டிருந்தனர்.


உலகில் யுரேனியம் கிடைக்கும் நாடுகளில் கடைசி இடத்தில் இருக்கும் அமேரிக்காவுடன் ஒப்பந்தம் செய்வதை காட்டிலும், அணுஆயுதங்கள் அற்ற நாடுகள் என்ற கூட்டுகுழுவில் இந்தியா இணைந்து கொள்ளலாமே. மேலும் அணுசக்திகழிவுகள் குறித்து இன்னும் வெளிப்படையாக நடந்து கொள்ளாத இந்தியா, மேற்கொண்டு அணுசக்தி உற்பத்தி குறித்து பேசுவதே அர்த்தமற்றது. இந்தியாவின் பலமும் எதிர்காலமும் விவசாயத்திலும் மனிதவளத்திலும் தானே தவிர அணுசக்தியில் இல்லை. (மாற்றுக்கருத்துக்கள் இருந்தாலும் அறிவகத்துககு தெரியப்படுத்தவும் அடுத்த பதிப்பில் விரிவாக விவாதிக்கலாம்)

ஐ.நா சபையே முயன்றும் 50 ஆண்டுகளாக முடியாத பேரழிவு ஆயுத ஒழிப்பை சாமானியர்கள் நாம் விவாதித்து தீர்த்துவிட முடியுமா?
· பல நல்லெண்ணவாதிகள், எதார்த்தவாதிகள் கேட்ட இந்த கேள்விக்கு அறிவகம் தலைவணங்குகிறது.
· நம்மால் முடியும். தற்போதுள்ள உலக மானுடவியல் பிரட்சனைகளை அறிவகம் இரண்டாக பிரித்துள்ளது. 1. உலகின் அவசரத்தேவை, 2. உலகின் அடிப்படை தேவை. அடிப்படை தேவை குறித்து இனிவரும் பதிப்புகளில் ஆலோசிக்கப்போகிறோம். இந்த கட்டுரைகளின் முடிவில் அவசரம், அடிப்டை தேவைகளை உடனடியாக சாத்தியப்படுத்திக்கொள்ள எளிமையான, நடைமுறைக்கு உகந்த தீர்வுகள் சொல்லப்படுகிறது. தொடந்து ஆலோசனைகளை தருவதன் மூலம் நீங்களும் இந்த ஒப்பற்ற பணியில் இணைந்து கொள்ளுங்கள்.
· தொடர்புக்கு... arivakam@gmail.com ( அறிவகத்தில் பதிப்புகள் வெளியிடல் விபரங்களை உடனுக்குடன் அறிந்து கொள்ள உங்கள் மின்னஞ்சல் முகவரியை அறிவகத்துக்கு தெரியப்படுத்தவும்).
அடுத்த பதிப்பில் ... (யார் இந்த சர்வதேச பயங்கரவாதிகள்? யார் இந்த சுயநல அரசியல்வாதிகள்?)

7 comments:

 1. தங்களது சிந்தனைகளை தமிழிஷ் மூலமாக அறிந்து கொண்டேன். ஒரு உருப்படியான விஷயத்தை பற்றி பதிவு எழுதி வருகுறீர்கள். உங்களுடைய உலகளாவிய கண்ணோட்டம் வரவேற்கதக்கது. வாழ்த்துக்கள்.

  //ஐ.நா சபையே முயன்றும் 50 ஆண்டுகளாக முடியாத பேரழிவு ஆயுத ஒழிப்பை சாமானியர்கள் நாம் விவாதித்து தீர்த்துவிட முடியுமா?//

  முடியும் என்றே தோன்றுகிறது. இது போன்ற எண்ண அலைகள் இளைஞர்கள், குழந்தைகள் மத்தியில் ஏற்படுத்த வேண்டும். எந்த விசயத்தையும் பல முறை உரக்க கூறி கொண்டிருந்தால் விழ வேண்டிய காதுகளில் நிச்சியம் விழும்.

  தொடர்ந்து எழுதுங்கள் . வாழ்த்துக்கள். - லட்சுமி, சென்னை.

  ReplyDelete
 2. அறிவகம். அணுஆயுதங்கள் ஒழிக்கப்படவேண்டியது அவசியும். எவ்வளவு சீக்கிரம் நடக்கிறதோ அவ்வளவு நல்லது. இதைப்பற்றிய விழிப்புணர்வும் மக்களுக்கு மிக அவசியம். அதில் உங்கள் பணியை பாராட்டுகிறேன்.

  ஆனால் பிரச்சனை அணு ஆயத ஒழிப்பு நடப்பில் சாத்தியமா என்பதுதான்.

  1) வல்லரசுகள் தாமாகவே அவற்றை கைவிட வேண்டும். அது நடப்பதற்கான வாய்ப்புகள் முற்றிலும் இல்லை.

  2) அணு ஆயுதத்திற்கெதிரான இன்னொரு வல்லரசு உருவாகி, இவர்களை மிரட்ட வேண்டும். இதுவும் இப்போது நடக்கப்போவதில்லை.

  மக்களிடம் ஏற்படும் விழிப்புணர்வு தீவிர வெளியுறவுக்கொள்கையாகி பிற நாடுகளை நிர்பந்தித்து அவர்களை அணுஆயுதங்களை கைவிடச் செய்வது என்பது எனக்கு குதிரைக் கொம்பாகவே படுகிறது.

  நமக்கு அதைவிட மிக அவசியமான, உடனடியாக தீர்க்கப் படவேண்டிய பிரச்சனைகள் அதிகம்.

  ReplyDelete
 3. பாலக்காட்டில் இருந்து பிழையற்ற தமிழில் எழுதும் ஒரு தமிழர்,பத்திரிக்கையாளர்!!!!!
  நினைக்கும் போதே,ஆஹா...

  அழைப்புக்கு நன்றி...
  அடிக்கடி வருவேன்...

  வார்த்தை சரிபார்ப்பை எடுத்து விடுங்கள்..(word Verification at comment settings)

  ReplyDelete
 4. விரிவான விளக்கம். பல சந்தேகங்கள் தீர்ந்தன.

  உங்கள் பதிவு அனைவரில் பார்வையிலும் பட்டதா என்று தெரியவில்லை! பின்னூட்டம் குறைவாக இருப்பதால் அப்படி நினைத்தேன்.

  உங்களின் இந்த தெளிவான பதிவிற்கு என் நன்றிகள் பல. தொடர்ந்து இதை போல பயனுள்ள பதிவுகளை எழுதுங்கள்.

  ReplyDelete
 5. mm... nallathu nadakkattum.

  ReplyDelete
 6. வருகைக்கு நன்றி ஜே.கே.. எல்லோரும் கேட்கும் கேள்வி இது தான். அணுஆயுதங்களை ஒழிக்க முடியுமா? ஆனால் ஒழித்தாகவேண்டிய கட்டாயத்தில் தான் மனிதகுலம் இருக்கிறது. வரலாற்றை திரும்பி பார்த்தால் இதே போன்ற திக்கு தெரியாத பல பிரட்சனைகளை மனிதகுலம் தாண்டி வந்திருப்பது தெரியும். இன்றைய நவின உலகுக்கு பின்னால் எத்தனை உழைப்பு இருக்கிறது. அவற்றுடன் ஒப்பிடும் போது நமது இலக்கு மிகச்சிறியது தான். உலகின் அவசரத்தேவையை மட்டுமல்ல, அடிப்படை தேவையையும்
  தொடர்ந்து அலசப்போகிறோம். தங்களை போன்றவர்கள் தொடர்ந்து கருத்துக்களையும் ஆலோசனைகளையும் தருவது அறிவகத்துக்கு கூடுதல் பலம். நன்றிகள் பல.
  *******************
  வருகைக்கு நன்றி கிரி... தமிழ் தட்டச்சு தெரியாமை, தமிழ் எழுத்துரு மாற்றி இல்லாமை. கருத்துக்களை வெளியிட விரும்பாமை. போன்றவை பின்னூட்டம் குறைவாக இருப்பதற்கு காரணங்கள். மேற்கண்ட குறைபாடுகள் உள்ள பலர் மின்னஞ்சலில் கருத்துக்களை தெரிவிக்கிறார்கள். அறிவகத்தின் முயற்சிக்கு கிடைக்கும் வரவேற்பு எங்களை ஊக்கப்படுத்துகிறது. தொடர்ந்து ஆலோசனைகளை தாருங்கள். நன்றி.
  *****************
  திரு. அறிவன் வருகைக்கு நன்றி. தொடர்ந்து ஆலோசனைகளை தாருங்கள்.
  திருமதி. லட்சுமி வருகைக்கு நன்றி. தொடர்ந்து ஆலோசனைகளை தாருங்கள்.

  ReplyDelete
 7. தங்களுடைய சிந்தனை அருமை
  இன்னும் நிறைய எதிர்பார்த்து
  http://loosupaya.blogspot.com

  ReplyDelete