அறிவகம் புதிய இணையதளம்

Sunday, August 17, 2008

கடவுளுக்கும் ஆன்மீகத்துக்கும் என்ன சம்மந்தம்? (உலகின் அவசரத்தேவை -10)

அறிவியலா ஆன்மீகமா பதிப்பில் பலருக்கும் பல சந்தேகங்கள் இருந்தது. அவ்வளவு பிரமாண்டமான அறிவியலை ஒரே அடியாக முட்டாள்தனமாய் சொன்னால் ஏற்றுக்கொள்ள முடியாது தான்.

கேள்வி பதில் அடிப்படையிலேயே சந்தேகங்களுக்கு பதில் காண்போம்

பிரபஞ்சம் என்றால் என்ன?

பால்வெளி, சூரியன், கிரகங்கள், பூமி, புல், பூண்டு, மனிதன், விலங்கு, தூசு என எல்லாம் சேர்ந்த மொத்த அமைப்பு தான் பிரபஞ்சம். இதோடு நிற்காமல் பிரபஞ்சம் என்பதை முகக்காலமும் சேர்ந்ததாக எடுத்துக்கொள்ள வேண்டும். அதாவது இறந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் இவற்றை அடக்கியது தான் பிரபஞ்சம். சுருக்கமாக காலம் தான் பிரபஞ்சம் எனலாம். பேரரிஞர் ஐன்ஸ்டீன் கூட பிரபஞ்சத்தை ஒரு கால வெளியாகவே குறிப்பிடுகிறார். இது குறித்த விரிவான விளக்கங்களை அடுத்த பதிப்பில் எளிமையாகவே சொல்கிறோம்.( இங்கு சொன்னால் பதிப்பு பக்கம் நீண்டுவிடும். மற்ற கேள்விகளை பார்க்க முடியாது)

ஆன்மீகம் என்றால் என்ன?

காலத்தை ஆளுகை செய்யும் அறிவு தான் ஆன்மீகம். அது தான் கடவுளும். இது உங்களுக்கு நிச்சயம் புரிந்திருக்காது. இதை கதையாகவோ உதாரணங்களாகவோ சொன்னால் யாருக்கும் புரியாது. ஏற்றுக்கொள்ளவும் மாட்டார்கள். அதனால் அறிவியல் ரீதியான நிரூபணங்களுடன் அடுத்தடுத்த பதிப்பில் விளக்கி சொல்கிறேன். முதலில் அறிவியலையும் பிரபஞ்சத்தையும் தெளிவாக புரிந்து கொள்வோம். அப்போது தான் ஆன்மீகத்தை எளிமையாக புரிந்து கொள்ள முடியும்.

அறிவியல் என்பது என்ன?

அறிவியல் என்பது ஒரு பொருளை(கருவியை) மையமாக வைத்து பிரபஞ்சத்தை ஆய்வது. ஆனால் பிரபஞ்சம் எனபது பொருள் மட்டும் சார்ந்தது அல்ல. பொருளுக்கு அப்பாற்பட்ட ஒன்றும் இருக்கிறது. இதை விஞ்ஞானிகள் தெளிவாகவே ஏற்றுக்கொள்கிறார்கள். உதாரணமாக ஐன்ஸ்டீனுக்கு முன்பு விண்வெளியை வெற்றிடமாகவே விஞ்ஞானிகள் கருதி வந்தார்கள். அதனால் விண்வெளியில் இருந்து வரும் ஒளியை கடத்த ஈதர் என்ற கற்பனை துகளை பயன்படுத்தினார்கள். பின்னர் அது மின்காந்த அலைகள் என பெயர் மாற்றபட்டு விட்டது.

உண்மையில் இரண்டு பொருட்களுக்கு இடைபட்ட வெளியில் என்ன இருக்கிறது என்பது இன்றுவரை விஞ்ஞானிகளுக்கு கேள்விகுறி தான். இந்த இடத்தில் தான் ஆன்மீகம் தேவைப்படுகிறது. ஆன்மீகத்தை அறிவியலோடு பொருத்தும் போது எல்லமே பொய்யாகிவிடுகிறது. அதாவது இதுவரை விஞ்ஞானிகள் கணித்து வைத்துள்ள எல்லாமே பொய்யாகிறது. இங்கு நாம் ஒன்றை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். வானியால் விஞ்ஞானிகள் இதுவரை கண்டுபிடித்துள்ளது எல்லாம் கணிப்புகளே அல்லாமல் முழுமையான நிரூபணங்கள் அல்ல. மறுப்பதற்கு சரியான ஆதாரங்கள் இல்லாததால் ஏற்றுக்கொள்ளப்பட்ட கணிப்புகள் இவை.

பல கணிப்பு மற்றும் கண்டுபிடிப்புகளில் ஒரு விஞ்ஞானியின் கருத்தை இன்னொரு விஞ்ஞானி ஏற்றுக்கொள்வதில்லை. இதெல்லாம் பெரிது படுத்தபபடாமையால் யாருக்கும் அறிவியல் மீது சந்தேகம் வருவதில்லை.

சுருக்கமாக அறிவியல் என்பது பொருள் சார்ந்தது. பொருளுக்கு அப்பாற்பட்ட ஒன்று இருக்கிறது என்பதை அறிவியலாளர்கள் மறுப்பதில்லை. பொருளுக்கு அப்பாற்பட்டதை அறிவியலால் மட்டுமே விளக்க முடியாது.

மதத்துக்கும் ஆன்மீகத்துக்கம் உள்ள சம்மந்தம் என்ன?

முழுமையான ஆன்மீகம் என்பது ஒரு சூன்யம். அது மனிதகுல வாழ்க்கைக்கு உகந்தது அல்ல. இதை தெளிவாக புரிந்து கொண்டனர் ஆதிகால ஆன்மீக ஞானிகள். இருந்தாலும் ஆன்மீகத்தின் உதவி மனித வாழ்க்கைக்கு பெரிதும் தேவைபட்டது. எனவே ஆன்மீகத்தை ஒரு வரையரைக்குள் பயன்படுத்த முற்பட்டார்கள். அந்த முயற்சிகள் அவரவர் கால சூழல் மற்றும் கலாட்சாரத்திறகு ஏற்ப அமைந்தது. அப்படி கால சூழலுக்கும் கலாட்சாரத்துக்கும் ஏற்ப வந்த கோட்பாடுகள் தான் இன்றைய பல்வேறு மதங்கள்.

கிறிஸ்துவம், இஸ்லாமியம் இந்துத்துவம், இன்னும உலகளாவிய எல்லா மதங்களும் ஆன்மீகத்தை போதிக்கிறது. ஆனால் ஆன்மீகம் என்ற பிரமாண்டமான உண்மையை அவரவர் கலாட்சாரத்க்கு எற்ப வளைத்துக்கொண்டார்கள். அதில் தான் பிரட்சனையே முளைத்தது.

பைபிள், குரான், கீதை, உபநிடதங்கள் இவையெல்லாம் ஆன்மீகம் என்ற உண்மையின் சாரம்சத்தை உவமையாக(கதையாக) சொல்லியிருக்கிறது. கதையின் கருத்து தான் உண்மை. அனால் பல மத தலைவர்களும் கருத்தை விட்டுவிட்டு கதையை பிரபலப்படுத்திக்கொண்டார்கள். அதனால் தான் இன்று கடவுள், சொர்க்கம், மறுபிறவி, கூடுவிட்டுகூடுபாய்தல் இதெல்லாம் நம்மால் நம்பமுடியாத ஒரு உண்மையாகி விட்டது.
(இது குறித்த விரிவான விளக்கங்கள் கட்டுரை போக்கிலேயே பார்க்கலாம்)

அறிவகம் சொல்ல வருவது என்ன?

இன்றைய மனிதகுலத்தின் அவசரத்தேவை மற்றும் அடிப்படை தேவைகளை உலகில் சாத்தியப்படுத்த வேண்டும். சமாதானமும் சமத்துவமும் தவழும் புதிய யுகம் படைக்க வேண்டும். இதை நோக்கிய ஒரு முயற்சிதான் அறிவகம்.

இந்த இலக்குக்கும் ஆன்மீகம்-அறிவியலுக்கும் என்ன சம்மந்தம்?

இன்று மனிதகுலத்துள் நிலவும் அரசியல் முதல் அத்தனை பிரட்சனைகளுக்கும் ஆன்மீகம் தான் காரணம். மதம், மொழி, இனம், நாடு, கட்சி, இத்தனை பிரிவினைகளுக்கும் அடிப்படை காரணம் ஆன்மீக அறியாமை தான். ஆன்மீகத்தை சரியா புரிந்து கொள்ளும் போது மதம், கடவுள், மரணம், சொர்க்கம், கொலை கொள்ளை, பாவம், பழி இப்படி எல்லா பிரட்சணைகளுக்கும் ஒரு சாமான்யனாலேயே தீர்வு காண முடியும். அறிவியலும் ஆன்மீகமும் சரியாக இருந்தால் அரசியலை எளிமையாக சீர்திருத்திவிட முடியும்.

மொத்தத்தில் அறிவியல், ஆன்மீகம், அரசியல் பிரட்சணைகளுக்கான காரணங்களையும் அதற்கான நிரந்தர தீர்வையும் மக்களுக்கு புரிய வைத்துவிட்டால் போதும். அறிவகத்தின் இலக்கு நிறைவேற வழி பிறந்துவிடும்.

தொடர்ச்சி அடுத்த பதிப்பில்... ( பிரபஞ்சத் தோற்ற இயக்க உண்மைகள் என்ன? காலம் எப்படி எல்லோரையும் முட்டாளாக்குகிறது?)

உங்கள் மேலான கருத்துகள் மற்றும் ஆலோசனைகளுக்கு... arivakam@gmail.com

5 comments:

  1. வ‌ண‌க்க‌ம்
    உங்க‌ள் செய‌ல்பாடு ம‌கிழ்ச்சிய‌ளிக்கிற‌து
    உங்க‌ளுக்கு இணைப்பு தந்துதுள்ளேன்.

    ReplyDelete
  2. //பைபிள், குரான், கீதை, உபநிடதங்கள் இவையெல்லாம் ஆன்மீகம் என்ற உண்மையின் சாரம்சத்தை உவமையாக(கதையாக) சொல்லியிருக்கிறது. கதையின் கருத்து தான் உண்மை. அனால் பல மத தலைவர்களும் கருத்தை விட்டுவிட்டு கதையை பிரபலப்படுத்திக்கொண்டார்கள். அதனால் தான் இன்று கடவுள், சொர்க்கம், மறுபிறவி, கூடுவிட்டுகூடுபாய்தல் இதெல்லாம் நம்மால் நம்பமுடியாத ஒரு உண்மையாகி விட்டது.
    //

    அருமையாகச் சொல்லி இருக்கிறீர்கள், எனது பதிவுகளில் மதம் என்பது வழிபாடு மற்றும் கலச்சாரத்தை வழியுறுத்தும் ஒரு அமைப்பு முறைதான். ஆன்மிகமும், இறையும் மதத்திற்கு அப்பாற்பட்டதாக மிகவும் தொலைவில் இருப்பவை என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன்.

    மதவாதிகள் காட்டும் கட்டுக்கதைகள்தான் ஆன்மிகம் என்று உண்மையான இறை நம்பிக்கையாளர்களும் நம்பிவிடுகிறார்கள். ஆன்மிகவாதிகளின் சிந்தனையும் அது உலகமக்களுக்கு வழங்கும் நன்மையும் மதங்களைக் கடந்ததாக இருக்க வேண்டும்.

    மதங்களை இறைவன் உருவாக்கினான் என்று சொன்னால் மறைமுகமாக இறைவன் பேதங்களை உருவாக்கினான் என்ற பொருள்தானே ?

    பகுத்தறிவுவாதிகளை எதிர்ப்பதற்கு ஒன்று கூடுவதைத் தவிர்த்து தங்களுக்குள் உள்ள ஒற்றுமையை வளர்த்துக் கொள்ளவோ, மூடநம்பிக்கைகளை களையவோ மதவாதிகள் ஒன்றுபடுவதில்லை. அவரவர் கொள்கை என்று இருந்தாலும் பாராட்டலாம், ஆனால் அந்த வேறுபாடுகளை வைத்துக் கொண்டுதான் மனித இணத்தை பிரிக்கும் மாயக்கோடுகளுக்கு வண்ணமாகவே இருக்கிறார்கள்.

    தொடர்ந்து எழுதுங்கள் நண்பரே. இறைநம்பிக்கை உடையவர்கள் மதங்களைத் துறப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

    ReplyDelete
  3. உங்களை நேரில் சந்திக்க ஆசைப்படுகிறேன். முடியுமா?

    ReplyDelete
  4. திரு. ரமேஷ் நீங்கள் யார்?, எங்கிருக்கிறீர்கள்? எதற்காக என்னை சந்திக்க விரும்புகிறீர்கள்? உட்பட விபரங்களையும் தெரியப்படுத்தலாமே. பொதுவில் பின்னூட்டம் மூலமாக தெரியப்படுத்த விருப்பமில்லை என்றால், அறிவகத்துக்கு மின்னஞ்சல் வழி தெரியப்படுத்துங்கள். நிச்சயம் அனுமதி உண்டு.- அன்புடன் அறிவகம்.

    ReplyDelete