அறிவகம் புதிய இணையதளம்

Monday, July 21, 2008

டாக்டர். அப்துல்கலாமிடம் ஒருகேள்வி(அவரின் பதிலுடன்) -உலகின் அவசரத்தேவை- 4

கனவு காணுங்கள்! கனவு காணுங்கள்! என அழைக்கும் டாக்டர். அப்துல்கலாம் அவர்களே, கள்ளம் கபடமில்லாத பிஞ்சு உள்ளங்களின் கனவுகளுக்கு என்ன உத்திரவாதம்? உலகே பேரழிவு கிடங்காகிக் கொண்டிருக்கும் போது கனவுகளுக்கும், லட்சியங்களுக்கும் என்ன உத்திரவாதம் உள்ளது.

பேரழிவு ஆயுதங்கள் நாளுக்கு நாள், நாட்டுக்கு நாடு பெருகிக்கொண்டு தான் இருக்கிறது. அது இப்போதைக்கு யாரையும் பாதிக்காது. எனவே பிஞ்சுகளே கனவு காணுங்கள், மாணவர்களே கனவுகாணுங்கள், இளைஞர்களே கனவுகாணுங்கள், உங்கள் கனவுகள் நிஜங்களாகட்டும், இலட்சியங்கள் வெல்லட்டும். சாதனைகள் குவியட்டும். ஆனால் எவ்வளவு நாள்! உங்கள் இன்பக் கனவுகளும் இலட்சிய வெற்றிகளும் எவ்வளவு நாள்?

அணு ஆயுதங்கள் கைகட்டி காத்திருக்கும் காலம் மட்டும் தானே. சிந்தித்துபாருங்கள் உங்கள் இலட்சியங்களின் ஆயுள் எவ்வளவு நாள்?

உலகளாவிய இலட்சியவாதிகளே!

பலகோடி நூற்றாண்டு வெல்லப் போவதுவா உங்கள் லட்சியங்கள், அல்லது இன்னும் சில ஆண்டுகளில் அணுஆயுதப் போருக்கு இறையாகி அழிந்து போவதுவா? அணுஆயுதப்போர் வந்துவிட்டால் செயற்கைகோள் இருந்து என்ன பயன், கணிணி, இணையம், செல்பேசி, விமானம், என எதுதான் இருந்து என்ன பயன்? இன்னும் இன்னும் பல புதுமைகள் படைக்க முயன்றுகொண்டிருக்கும் உங்களின் இலட்சிய கனவுகள் இருந்து தான் என்ன பயன்? கொடூர அணுஆயுதப்போர் இந்த ஆண்டே வராது என்பது எவ்வளவு நிச்சயம்?

பல்லாண்டுகள் சந்ததி சந்ததியாய் வாழத்துடிக்கும் இலட்சியவாதிகளே நீங்கள் வாழ்ந்தாக வேண்டாமா? நீங்கள் வாழ்ந்த இந்த மண்ணில் உங்கள் சந்ததிகள் வாழ வேண்டாமா? உங்கள் கனவுகளும் லட்சியங்களும் இந்தபூமியில் தொடர்ந்து வலம் வர வேண்டாமா?

ஆம்! என்பதுதான் உங்கள் பதிலானால்; உங்களுடைய என்னுடைய இன்னும் உலகில் உள்ள ஒவ்வொருவருடைய தனிப்பட்ட கனவுகளுக்கும் லட்சிய வெற்றிகளுக்குமான முதல் பொதுத் தேவை பேரழிவு அணுஆயுத ஒழிப்பு. பேரழிவுஆயுதங்கள் ஒழிக்கப்படா விட்டால் உங்கள் எந்த கனவுகளுக்கும் உத்திரவாதம் இல்லை. 21ம் நூற்றாண்டில் அடி எடுத்துவைத்துள்ள ஒவ்வொரு மனிதனும் செய்தாகவேண்டிய முதல் அவசரத்தேவை பேரழிவு அணுஆயுத ஓழிப்பு.

கனவு காணும் பிஞ்சுகளே
இலட்சியம் தேடும் இளைஞர்களே
உயிர்வாழ துடிக்கும் உலக எதார்த்தவாதிகளே

அழிவு விளிம்பிலுள்ள இந்த உலகிற்கு அவசரத்தேவை இறைவனல்ல, மதங்களல்ல, இண்டர்நெட் விரிவு அல்ல, செவ்வாய் கிரக நீர் அல்ல, கிரிக்கெட்டும் கால்பந்தும் அல்ல. இந்த உலகின் மிகமிக மிக அவசரத்தேவை பேரழிவு அணுஆயுத ஒழிப்பு .
உண்மையை கொஞ்சம் எதார்த்தமாக புறிந்து கொள்ளுங்கள்.
இந்த கட்டுரை குறித்து கலாம் அவர்கள் அறிவகத்துக்கு அனுப்பிய மின்னஞ்சலை அப்படியே இங்கு தருகிறோம்.
Having an aim in life is the prerogative of the individual. Aim leads to thinking, acquiring knowledge, hard work and canapcity to persevere. That is how I have explained DREAM by the youth on many occasion. In the last 50 years, nulcear disarmament has been the subject of many international forum. Nuclear war will be a foolish war and it may never happen. Young people should be busy in many of their very important areas of improving their life and contributing to the improvement of the life of the society as a whole. Most important thing for India today is removal of the poverty of 220 million people, enhancing the literacy to near 100%, providing quality healthcare to reach every citizen, and above all, providing opportunity for every citizen to lead a life with dignity. Regaring the world, pressing problem is evolution of clean green planet earth, because every year 30 billion tones of carbon dioxide is being pumped into the atmosphere. We need a clear energy, hence I have proposed energy independence comibination of three sources - renewable energy like Solar and wind Power, Nuclear Power and biofuel.
Greetings and best wishes
Kalam (20.07.2008).
வாழ்வில் குறிக்கோள் ஒன்றைக் கொண்டிருப்பது ஒருவரின் தனிப்பட்ட உரிமை. இலட்சியம் ஒருவரைச் சிந்திக்க வைத்து, அறிவைத் திரட்டச் செய்து, கடின உழைப்புக்கும், விடாமுயற்சிக்கு வழிவகுக்கிறது. இளைஞர்களின் கனவைப் பற்றி பல சந்தர்ப்பங்களில் நான் அப்படித்தான் விளக்கி யிருக்கிறேன். கடந்த 50 ஆண்டுகளில் அணுஆயுத ஒழிப்பு என்பது தான் உலக அரங்கில் விவாதிக்கப்பட்ட முக்கிய பிரச்சனையாக இருந்து வந்துள்ளது. அணுஆயுத போர் என்பது மூடத்தனமான போர். அது ஒருபோதும் வரப்போவதில்லை.
இளைஞர்கள் தங்கள் குறிக்கோளில் முழுமையாக ஈடுபட்டுத் தங்கள் சுய முன்னேற்றத்திற்கும் சமூக முன்னேற்றத்திற்கும் வழிவகுக்க வேண்டும். இன்று இந்தியாவில் 22 கோடி மக்களின் வறுமையைப் போக்க வேண்டும். கல்வி அறிவு 100 சதவீதமாக பெருக்கப்பட வேண்டும். அடிப்படை சுகாதாரம் ஒவ்வொருவரையும் அடைய வழி செய்யவேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக மனித மதிப்புடன் ஒவ்வொரு குடிமகனும் வாழ வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும்.
தற்போது உலகின் அத்தியாவிசய தேவை மாசற்ற பசுமையான சூழ்நிலை அமைப்பு. ஏனெனில் ஒவ்வோர் ஆண்டும் 30 லட்சம் கோடி டன் கார்பன் டையாக்ஸைடு வாயு, சூழ்வெளியில் திணிக்கப்படுகிறது! நமக்குச் சுத்தமான எரிசக்தி தேவை. ஆகவே நான் மூன்றுவித தனித்துவக் கூட்டு மூலாதார எரிசக்திகளை - சூரிய சக்தி, காற்றுச் சக்தி, அணுக்கருச் சக்தி, உயிரின எச்சப் பொருள் சக்தி போன்ற புதிப்பிக்கதக்க எரிசக்திகளை - எடுத்துக் கூறியிருக்கிறேன்.
நல் வாழ்த்துக்களுடன், நல் விருப்புக்களுடன்,
கலாம்.(20.07.2008).

டாக்டர் கலாம் அவர்கள் குறிப்பிடுவது போல பூமி வெப்பமடைகிறது, மாசு அடைகிறது என்பது உண்மை தான். அதே போல வறுமையின்மை, சுகாதாரம், கல்வி இவைகளும் மிகமிக அத்தியாவிசயமான தேவைகள் தான். இவைகளை நிவர்த்தி செய்துகொள்ள கால அவகாசம் எடுத்துக்கொள்ளலாம். ஆனால் பேரழிவு ஆயுதங்கள் வைத்திருக்கும் ஒவ்வொரு கணமும் நமக்கு ஆபத்து தானே. இந்த 50 ஆண்டுகாலமாக அணுஆயுத ஒழிப்பு உலக அரங்கில் விவாதிக்கப்பட்டுள்ளதே தவிர ஒழிக்கப்படவில்லை. மாறக பல மடங்கு அதிகரித்துள்ளது என்பதே நிதர்சனமான உண்மை. நாங்கள் இங்கு ஆணுஆயுதங்களை மட்டும் குறிப்பிடவில்லை. உயிர்கொல்லி ஆயுதங்கள்(Bio weapons) போன்ற பேரழிவு ஆயுதங்களையும் தான். இவை இன்று உலகில் இல்லை என மறுக்கமுடியுமா? போர் வராது என்றால் இவையெல்லாம் எதற்காக காத்திருக்கின்றன. இவைகள் தீவிரவாதிகளின் கைக்கு போகாது என்பதற்கு என்ன உத்திரவாதம் உள்ளது? பாதுகாப்புக்கு உகந்ததல்லாத இந்த பேரழிவுஆயுதங்கள் முற்றிலும் ஒழிக்கபட வேண்டும், வறுமையின்மை, கல்வி, சுகாதாரம், மாசாற்ற பூமி இவைகளை உடனடியாக சாத்தியப்பட வேண்டும். இதற்கான வழிமுறைகளை ஆய்ந்து செயல்படுத்தும் தொலைநோக்கு முயற்சி தான் அறிவகம். இதில் நீங்களும் பங்கேற்கலாம். ஆலோசனைகளை தாருவது தான் உங்கள் உயரிய பங்களிப்பு. உங்களுக்கென ஒரு தனிப்பட்ட லட்சியம் இருக்கும். அதில் நீங்கள் வெற்றியடைய எனது வாழ்த்துக்கள். அதே போல உங்களுடைய தனிப்பட்ட லட்சியங்களோடு இந்த உலகின் அவசரத்தேவையையும் ஒரு பொது லட்சியமாக எடுத்துக்கொள்ளுங்கள். எனது தாழ்மையான வேண்டுகோளாக மார்ட்டீன் லூதர்கிங்கின் ஆதங்கத்தையே மீண்டும் இங்கு நினைவூட்டுகிறேன்


எரிக்கவும் குண்டுவீசி அழிக்கவும் தீயவர்கள் கட்டுக்கோப்பாக ஒன்றுசேர்ந்திருக்கும்போது; மக்களை இணைத்து சேர்க்கவும், அமைதியை நிலைநாட்டவும் நல்லவர்கள் குறைந்தபட்சம் ஓர் அணியிலாவது சேரவேண்டாமா? (when bad people are united to burn and bomb; why can`t good people atleast join together to build and end?) - மார்ட்டின் லூதர்கிங்.



அடுத்த பதிப்பில்... (யார் இந்த சர்வதேச பயங்கரவாதிகள்? யார் இந்த சுயநல அரசியல்வாதிகள்?)
தொடர்புக்கு... arivakam@gmail.com, www.arivakam.wordpress.com, www.tamilarivu.blogspot.com

4 comments:

  1. எதிர்காலம் குறித்த தங்களின் சிந்தனை வரவேற்கத்தக்கது. தொடர்ந்து எழுதுங்கள்.- முகுந்தன்.

    ReplyDelete
  2. Perfect direction of thinking...

    If possible pls provide links to similar subject blogs on your blog.

    Well done.

    ReplyDelete
  3. //எரிக்கவும் குண்டுவீசி அழிக்கவும் தீயவர்கள் கட்டுக்கோப்பாக ஒன்றுசேர்ந்திருக்கும்போது; மக்களை இணைத்து சேர்க்கவும், அமைதியை நிலைநாட்டவும் நல்லவர்கள் குறைந்தபட்சம் ஓர் அணியிலாவது சேரவேண்டாமா? (when bad people are united to burn and bomb; why can`t good people atleast join together to build and end?) - மார்ட்டின் லூதர்கிங்.//

    உங்கள் பதிவுகள் வித்தியாசமாகவும் சிந்திக்க வைக்கவும் செய்கின்றன.வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி திரு. ராஜ்., திரு.ராஜ நடராஜன்.

    ReplyDelete