அறிவகம் புதிய இணையதளம்

Monday, July 14, 2008

உலகளாவிய இலட்சியவாதிகளே (உலகின் அவசரத்தேவை - 1)


மனிதப்பிறவியின் மறுபெயர் இலட்சியப்பிறவி. பிறந்து, வளர்ந்து, சந்ததியை பெருக்கிய பின் மாண்டுபோகும் விலங்கு அல்ல மனிதன். ஏதோ ஒரு இலட்சிய வேட்கை மனித மனதுள் எப்போதும் குடிகொண்டிருக்கும். அது இல்லாமல் மனிதனே இல்லை எனலாம். அதனால்தான் சொன்னேன் மனிதப்பிறவியின் மறுபெயர் இலட்சியப்பிறவி என. எனவே உலகளாவிய மனிதர்களை மனிதர்கள் என்பதை விட இட்சியவாதிகள் என்றே அழைக்கிறேன்.
உலகளாவிய இலட்சியவாதிகளே
வரலாறு தெறிந்த 21ம் நூற்றாண்டுக்குள் வந்துவிட்டோம். நமது சாதனை பயணத்தை கொஞ்சம் திரும்பிப்பார்ப்போம்.
பூகம்பம், நிலநடுக்கம், புயல், எரிமலை, கடல் கொந்தளிப்பு, அனல்காற்று, இன்னும் அரக்க விலங்குகள், உயரிகொல்லிநோய்கள், என எத்தனை எத்தனையோ இயற்கை அழிவுகள், கூடவே நமக்குள்ளேயே போட்டி,பொறாமை, போர், வன்முறை எனநாமே ஏற்படுத் திக்கொண்ட செயற்கைஅழிவுகள். இந்தனையோடும் போராடித்தனே இந்த வியத்தகு விஞ்ஞான உலகுக்குள் வந்திருக்கிறோம்.
செவ்வாய் கிரகத்தில் நாம் வாழமுடியுமா, என்று தேடிக்கொண்டிருக்கிறோம். இணையதளத்தில் உலகை இணைத்துக்கொண்டு நமது ஒவ்வொரு உணர்ச்சிகளுக்கும் உடனுக்குடன் விருந்து படைக்கிறோம். உலகில் எங்கு என்ன நடந்தாலும் நேரடித் தொலை காட்சி காண்கிறோம். எங்கு எத்தனை தொலைவில் இருந்தாலும் ஒருவொருக் கொருவர் செல்லில் பேசிக்கொள்கிறேம். இப்படி இன்னும் எத்தனை எத்தனையோ புதுமைகள்.

எதற்காக எல்லாம்? நமக்காக! நமது வாழ்க்கையின் எளிமைக்கும், இனிமைக்கும் வேண்டி இன்னும் இன் னும் இயற்கையை நம்வசம் வசப்படுத்திக் கொண்டிருக்கிறோம்.

செயற்கைகோள், இணையம், செல்பேசி, தியானம், பக்தி, அரசியல், ஆகாயஉலா, என எல்லாம் சரி; ஆனால் எதற்காக படைத்திருக்கிறோம் பேரழிவு அணு ஆயுதங்களை எந்தனையோ லட்சியங்கள், இலட்சிய வெற்றிகள், எல்லாம் சரி; ஆனால் இந்த அணு ஆயுதங்களின் இலட்சியம் என்ன?

நம்மை பாதுகாத்து, நமது சந்ததிகள் வழிவழியாய் இன்புற்று வாழத்தான் இந்த பேரழிவு ஆயுதங்களா?, அல்லது நம்மோடு நம்சந்ததியும் கூடவே உயிரின சரித்திரமும் அடி யோடு அழிந்து போக ஏற்படுத்திக்கொண்ட இலட்சியங்களா?

கொஞ்சம் சிந்தியுங்கள்.....

தொடர்ச்சி அடுத்த பதிப்பில்...(பூமி வெடித்து சிதறிவிடும்)

3 comments:

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  2. இதோ நானிருக்கிறேன் - லட்சிய மனிதனாக - ஆனால் உங்கள் அவசரத் தேவைக்காகவேல்லாம் என்னால் அரிசி கழிய முடியாது, புராணங்கள் சொல்லும் கடவுளர்களல்லவே வாழ்வின் உண்மை நாயகர்கள். எல்லோருக்கும் முன்பாக களத்த்தில் குதிக்கத் தயார் - வாழ்வனுபவம் என்னை பக்குவப்படுத்தட்டும் - உங்கள் தேவைக்கு இதோ நானும் என்னோடு இணையப்போகும் கைகளும்.

    இணைந்து செயல்படுவோம் தோழனே!

    ReplyDelete
  3. எங்கே இணைவது , எப்படி இணேவது? பெண் என்பதால் எப்போதும் தயங்கி வாழ்ந்து , கவலைப் பட்டு , மனம் குழம்பி வாழ்கிறோம்.

    பூசையும் , படையலும், விருந்தும் தான் வாழ்க்கை என்று இருந்தாலும், மனம் நீங்கள் எழுப்பி உள்ள கேள்விகளை அடிக்கடி இடித்துக் காட்டுகிறது. தாமரை இலை தண்ணீராக இரு என்று சொன்னாலும் அமைதி இல்லை.

    நம்மைப் போல் சிந்திப்பவர்களை சந்தித்தால் உடனே பதில் எழுத தூண்டுகிறது.

    Probably my activism ends here!

    So where to join hands and how to do ' something?"

    Back to square one.

    BTW nice writings, but it disturbs ...

    ReplyDelete